Friday, June 3, 2016

நூற்றாண்டு விழா காணும் உதைபந்தாட்டம்


அமெரிக்க கண்டத்தின் உதைபந்தாட்ட சம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் கோபா அமெரிக்க கிண்ணத்தொடர் இன்று  சனிக்கிழமை ஆரம்பமாகிறது. 1916 ஆம் ஆண்டு தென் அமெரிக்க உதைபந்தாட்டப் போட்டி காலப்போக்கில் வட அமெரிக்க நாடுகளையும் உள்ளடக்கி கோபா அமெரிக்கப் போட்டி என்ற பெயரில் நடைபெறுகிறது. 45 ஆவது கோபா அமெரிக்க கிண்ணப் போட்டி இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை அமெரிக்காவில் உள்ள பத்து மைதானங்களில் நடைபெறுகிறது. இதுவரை காலமும் தென் அமெரிக்காவில் நடைபெற்று வந்த இப் போட்டி முதன் முதலாக தென் அமெரிக்காவுக்கு வெளியே வட அமெரிக்காவில் நடைபெறுவது சிறப்பு அம்சம்.

ஆர்ஜென்ரீனா,பொலிவியா,பிரேஸில்,சிலி,கொலம்பியா,ஈக்குவடோர், பெரு, உருகுவே,வெனிசுவேலா , பரகுவே ஆகிய பத்து நாடுகளும் கொலம்பியா, ஜமேக்கா, மெக்ஸிகோ,  அமெரிக்கா, பனாமா, ஹெய்ட்டி ஆகிய ஆறு நாடுகளும் சம்பியனாவதற்கு மோதுகின்றன.அமெரிக்க உதைபந்தாட்ட வரலாற்றில் தென். அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. பத்து தென் அமெரிக்க நாடுகளும் ஆறு  வட‌ அமெரிக்க நாடுகளும்  கோபா அமெரிக்க தொடருக்குத் தகுதி பெற்றுள்ளன.உருகுவே 15 முறையும் ஆர்ஜென்ரீனா  14 முறையும், பிரேஸில்   8 முறையும் பரகுவே   பெரு,  ஆகியன தலா 2 முறையும் ஈக்குவடோர் பொலிவியா ஆகியன தலா ஒரு முறையும்     சம்பியனாகி  உள்ளன.   
ஏ பிரிவில் அமெரிக்கா,கொலம்பியா,கொஸ்ரரிகா,பரகுவே  பீ பிரிவில் ஹெய்ட்டி, பெரு, பிறேஸில்,ஈகுவடோர் சி பிரிவில்   ஜமேக்கா,வெனிசுவெலா,உருகுவே,மெக்ஸிகோ டி பிரிவில் பனாமா, பொலிவியா, ஆர்ஜென்ரீனா, நடப்பு சம்பியன் சிலி ஆகியன இடம் பெற்றுள்ளன.

உலகக் கிண்ணத்தில் முன்னணியில் உள்ள பிறேஸில் கோபா அமெரிக்க தொடரில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 15  முறை சம்பியனாகி உருகுவே முதல் இடத்தில் உள்ளது. 16 ஆவது முறை ச‌ம்பியனாகி முதலிடத்தை தக்க வைக்க வேண்டிய நிலையில் உருகுவே உள்ளது.உருகுவேக்கு சவாலாக ஆர்ஜென்ரீனா இருக்கிறது. 14 முறை சம்பியனான ஆர்ஜென்ரீனா 15 ஆவது முறை சம்பியனாகி உருகுவேயின் சாதனையை சமப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


கோபா அமெரிக்கக் கிண்ண சம்பியன் கிண்ணத்தை வெல்ல‌ வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் ஆர்ஜென்ரீனா இருக்கிறது. 1993 ஆம் ஆண்டு சம்பியனான பின்னர் இதுவரை ஆர்ஜென்ரீனா சம்பியனானதில்லை. கடந்த கோபா அமெரிக்க கிண்ண இறுதிப்போட்டியில் தோவ்லியடைந்தது. ஜெரால்ட் மார்ட்டினோவின பயிற்சியில் ஆர்ஜென்ரீன ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஐரோப்பிய போட்டிகளில் அசத்தும் மேஸி தாய் நாடான ஆர்ஜென்ரீனாவுக்காக விளையாடும் போது  சறுக்கிவிடுகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.  மேஸியின் ராசி தாய் நாட்டில் பலிப்பதில்லை என்ற விதியை அவர் மாற்றுவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

2004, 2008 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது ஆர்ஜென்ரீனா. 1993 ஆம் ஆண்டு கோபா அமெரிக்க சம்பியனாகியது. அதற்குப் பின்னர் எந்த ஒரு சம்பியன் கிண்ணத்தையும் ஆர்ஜென்ரீனா பெறவில்லை.  2014 ஆம் ஆன்டு உலகக்கிண்ணப் போட்டியிலும் 2015 ஆம் ஆன்டு கோபா அமெரிக்க போட்டியிலும் மேஸி தலைமையில் களம்இறங்கிய அர்ஜென்ரீனா நம்பிக்கையுடன் இறுதிப் போட்டிகளில் விளையாடி தோல்வியடைந்தது. 
1997 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை நான்கு முறை கோபா அமெரிக்க சம்பியனான பிறேஸில் அதன் பின்னர் முன்னேற முடியாமல் தவிக்கிறது. கடந்த கோபா அமெரிக்க போட்டியில் கால் இறுதியுடன் வெளியேறியது. துங்காவிடம் பயிற்சி பெற்ற இள‌ம் பிறேஸில் படை சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  தியாகோ சில்வா, டேவிட் லூயிஸ், மார்செலோ ஆகிய வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.  அணியில் இடம் பிடித்த காகா காயத்தால் வெளியேறிவிட்டார். பிறேஸில் அணியின் தலைவர் நெய்மரை விடுவிப்பதற்கு பர்சிலோனா நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்த வீரர்கள் இல்லாதது பிறேஸிலுக்கு பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை.


ஒலிம்பிக் கோபா அமெரிக்கா ஆகிய இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒன்றில் விளையாடுவதற்கு மட்டும் தான் நெய்மரை விடுவிக்க முடியும் என பர்சிலோனா நிர்வாகம் நிபந்தனை விதித்தது. தாய் நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக்கில் விளையாடுவதே நெய்மரின் விருப்பம். சம்பியனாகும் தகுதி உள்ள உருகுவேயின் முன்னணி வீரர் லூயிஸ் சுவாரஸ் காயத்தால் அவதிப்படுததால் ஆரம்பப் போட்டிகளில் விளையாடமாட்டார். இதனால் உருகுவே ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

ஜாவியர் ஹெனான்டர்ஸ் [மெக்ஸிகோ],ஜேம்ஸ்ரொட்ரிக் [கொலம்பியா],வில்லியன் கப்ரியல்[பிறேஸில்],டியாகொ காடின் [உருகுவே],அலெக்சிஸ் சாஞ்சஸ்,கிளாடியோ பிராவோ, அர்துடோ விராஸ் [சிலி] ,கிறிஸ்டியன் புலிஸிக், ஜெர்மைன் ஜோன்ஸ் [அமெரிக்கா] ஆகிய வீரர்கள் மீது ரசிகர்கள் ந‌ம்பிக்கை வைத்துள்ளனர்.
வர்மா





No comments: