Tuesday, March 15, 2016

சொனனதைச் செய்வாரா ஜனாதிபதி மைத்திரி

அதி உஅயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை ஆறு மாதங்களில் மீள் குடிஏற்றுவேன் என சபதமிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்று மாதங்கள் கடந்த பின்னர் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த காணியையும் புகழ் பெற்ற பாடசாலையான நடேஸ்வரா கல்லூரியையும் விடுவித்தார். நல்லிணக்க அரசாங்கம் பதவி ஏற்ற  போது எமது  பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்ற அபிலாசை தமிழ் மக்கள் மனதில் தோன்றியது.  அவற்றில் ஒரு சிலவற்றை இந்த அரசாங்கம் தீர்த்து வைத்தது.ஆனால், ஒரு சில பிரச்சினைகளை ஆறப்போட்டுள்ளது.

வலிகாம மக்கள் அதிக வலியுடன் வாழ்ந்து வருகின்றனர்.  சொந்த நாட்டியேலே  25 வருட அகதி வாழ்க்கை என்பது மிகக்கொடூரமானது. நாட்டின் பாதுகாப்பு என்ற கறித்தியலில் சொந்த மக்களை விரட்டிவிட்டு  இராணுவத்தை அமர்த்தியது  கடந்தகால அரசுகள். தமிழ்மக்கள் விரட்டப்பட்டு சிங்கள இராணுவம் அங்கு குடியேறியது. யுத்தம் முடிந்து விட்டது எமது இடங்களை மீளவும் எங்களிடம் தருங்கள் என மக்கள் கோரிக்கை விட்டபோது பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு இராணுவம் அகற்றப்பட மாட்டாது  என  நல்லிணக்க அரசாங்கம்   பதிலளித்தது. ஜனாதிபதி மைத்திரியின் முயற்சியினால் சில  இடங்கள் பகுதி பகுதியாக விடுவிக்கப்படுகின்றன.

தமிழ்  மக்கள் சொந்த இடங்களில் குடியேறுவது சில சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்குப்  பிடிக்கவில்லை. இராணுவத்தின் தியாகத்துடன் மீட்கப்பட்ட இடங்களை ஜனாதிபதி மைத்திரி தமிழ் மக்களிடம் கொடுக்கிறார்கள் என அவர்கள் விஷமப் பிரசாரம் செய்கின்றனர். இந்த சிஷமப் பிரசாரம் சிங்கள மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் இனவாதிகளின் மனதில் இலேசான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.  சிங்கள மக்களின் மனதில் ஜனாதிபதிக்கு எதிரான சிந்தனையை இது தூண்டலாம். இவற்றுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

  உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த பிரபல பாடசாலைகளான நடேஸ்வரா கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகியன   விடுவிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையளிக்கப்பட்டுள்ளது.காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வளாகத்தில் , கல்லூரிகள் ஜனாதிபதியினால் கல்லூரி அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது., வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலுள்ள 700 ஏக்கர் காணியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.

 கடந்த சனிக்கிழமை  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதிஇ தெல்லிப்பளை  கோப்பாய் பிரதேச சபைப் பிரிவுகளில் 700 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளித்ததுடன்இ அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 65000 வீடுகளுக்கான வீட்டுத்திட்டத்தினையும்   பார்வையிட்டார்.

  12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 620 குடும்பங்களுக்கு தினம் ஜனாதிபதியினால் காணிகள் மீள கையளிக்கப்பட்டுள்ளதுடன் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் நிதியினையும் ஜனாதிபதிவழங்கினார்..

 மீள்டியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் ராமநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாணச சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும்கலந்து கொண்டனர்.

மீள் குடியேறும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. மக்களுக்க்க அமைக்கப்படும் வீடுகள் பொருத்தமில்லாதவை என்ற கருத்து உள்ளது.  அதனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பகிரங்கமாக குறிப்பிட்டார். மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவமிநாதன் முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு  பதிலளித்தார். அங்கு வாழப்போவது மக்கள்தான் என்றாலும் தேவை யான அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில் எத்தனை காலம்தான் தொடர்ந்து  வாழ முடியும். அகதி முகமா வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சொந்த இடத்தில் வாழப்போகும் மக்கள்  ஒருசில அடிப்படை வசதிகளை எதிர் பார்ப்பதில் தவறு இல்லை

பாதுகாப்பு எனற போர்வையில் தமிழ் மக்களின்  புறவீக இடங்களில் இருக்கும் இராணுவம் அங்கு சகல வசதிகளுடனும் வாழ்கிறது. தமிழ் மக்களின் காணிகளில் தோட்டம் செய்கின்றது. அக் காணிகளின் சொந்தக்காரர்கள்  வாழ்வாதாரத்துக்காக வேறொருவரிடம் கையேந்த  வேண்டிய நிலையில் உள்ளனர்.  இந்த இழி நிலையில் இருந்து மக்கள்  மீள வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கமும் வட மாகாண சபையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

யுத்தம் எனற கோர முகம் வலிகம் மக்களை ஓட ஓட விரட்டியது  நிம்மதியான வாழ்க்கைக்கு ஏங்கும் அவர்களுக்கு உதவுவதற்கு அரச அதிகாரிகள் முன்வரவேண்டும்.
ஊர்மிளா
சுடர் ஒளி
மார்ச்16/மார்ச்22

No comments: