Monday, February 8, 2016

கருத்துக் கணிப்புகளால் கலங்கும் தமிழகத் தலைவர்கள்

தேர்தல் காய்ச்சல் தமிழகத் தலைவர்களைப் பீடித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி தலைவர்களின் மனதில் குடிகொண்டுள்ளது. கூட்டணிசேர்வதா தனித்து தேர்தலைச்சந்திக்கிறதா என்று முடிவெடுக்க முடியதுஜெயலலிதா  குழம்புகிறார். கூட்டணிக்கான கதவைத் திறந்தபடி கருணாநிதி  காத்திருக்கிறார். யாரும் கதவை  எட்டிப்பார்க்கவில்லை. கருணாநிதியின் அழைப்புக்காக  காங்கிரஸ் காத்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதாக்கட்சி, மக்கள் நலக் கூட்டணி ஆகியவற்றுடன் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் பேச்சு வார்த்தை நடத்தி காலத்தை இழுத்தடிக்கிறார் விஜயகாந்த். விஜயகாந்தையும்,வாசனையும் வரவேற்க செங்கம்பளம் விரித்து காத்திருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் என் வழி தனி வழி என்று ராமதாஸ் முழக்கமிடுகிறார்.

தமிழக சட்ட சபைத்  தேர்தலுக்காக தலைவர்கள்  காய்  நகர்த்திக் கொண்டிருக்கையில் மக்களின் கருத்து நேர்மாறாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு  மாற்றீடாக மூன்றாவது அணி என்ற  மாயையையும் கூட்டணி அரசையும் தமிழக மக்கள் விரும்பவில்லை என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. புதிய வாக்காளர்களில் அதிகமானோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விரும்புவதாகவும் கூட்டணி அரசை விரும்பவில்லை எனவும்  குமுதம் ரிப்போட்டர் நடத்திய கருத்துக்  கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. 


தமிழகத்தில் தனிக் கட்சி ஆட்சி வேண்டும் கூட்டணி ஆட்சி வேண்டாம் என கருத்துத் தெரிவித்தவர்கள் கூறியுள்ளனர்.   63.59 சத வீத மக்கள் தனிக்கட்சி ஆட்சியையே விரும்புகின்றனர்.  இதனால் கருணாநிதியும்,ஜெயலலிதாவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  ஆட்சியில் பங்கு வேண்டும் துணை முதல்வர் பதவி வேண்டும், அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று கோரிய விஜயகாந்த்,திருமாவளவன்,  தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர்  ஏமாற்றமடைந்துள்ளனர். மத்தியில் கூட்டணி ஆட்சிக்கு பச்சைக்கொடி காட்டிய தமிழக மக்கள் மாநிலத்தில் தனிக்கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்.  
தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்துக்கணிப்பால்  மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களை அதிர்ச்சியடைந்துள்ளனர்.   நல்லகண்ணு,வைகோ,திருமாவளவன் ஆகிய மூவரும் முதல்வராக வேண்டும் என அவர்களது கட்சித் தொண்டர்கள் விரும்புகின்றனர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதல்வர் பதவிக்குப் போட்டி இல்லை. அங்கு ஜெயலலிதாவின் விருப்பம் தான் கட்சிக் கொள்கை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் கருணாநிதியா, ஸ்டாலினா முதல்வர் என்ற இழுபறி நிலவுகிறது. கருணாநிதி வழிவிட வேண்டும் என ஸ்டாலினின் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். அறாவது முறையும் முதல்வராகும் ஆசையில் கருணாநிதி தேர்தலை எதிர்நோக்குகிறார்.

தமிழக சட்டசபைத் தேர்தலைப் பற்றி யாரும் சிந்திக்காதபோது  மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த ராமதாஸ் மகனை முதல்வராக்க வேண்டிய அரசியல் காய்  நகர்த்தல்கள் எதனையும் செய்யவில்லை. அறிவித்ததுடன் நின்றுவிட்டார். தனது அறிவிப்புக்கு மதிப்பளித்து தமிழக மக்கள் அன்புமணியை முதல்வராக்கி  விடுவார்கள் என்ற பகல் கனவில் சுகம் காண்கிறார் ராமதாஸ். யாருடைய துணையும் இன்றி ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாத காங்கிரஸ் கட்சியிலும் சிலர் முதல்வர் கனவில் இருக்கின்றனர். சிலர் குஷ்புவை உசுப்பி விட்டுள்ளனர். பாரதீய ஜனதாவுடன்  இணைந்தால் முதல்வராகலாம்    அது கைக்கூடாவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் துணை முதல்வர் பதவியை பெறலாம் என விஜயகாந்த்  நினைக்கிறார்.

 முதலமைச்சராகும்   தகுதி உடைய கருணாநிதியையும் ஜெயலலிதாவையும்  தவிர்த்து முதலமைச்சராகும் தகுதி யாருக்கு இருக்கு என்ற கருத்துக் கணிப்பில் 13.7 சதவீதத்துடன் விஜயகாந்த் மூன்றாவது இடத்திலுள்ளார்.  முப்பது  சதவீத வாக்கு  வங்கியுடன் முன்னிலையில் இருக்கும் திராவிடக் கட்சிகளை வீழ்த்த   விஜயகந்துக்குக் கிடைத்த  ஆதரவு காணாது.   வைகோ 9.10 அன்புமணி,   8.35 நல்லகண்ணு   6.95  பொன்.ராதாகிருஷ்ணன்  5.78    சீமான் 3.40 திருமாவளவன்   2.37   குஷ்பு 1.13  ஆகியோர் சதவீத  ஆதரவைப் பெற்றுள்ளனர்.இவர்கள் முதல்வராவதை  மக்கள் விரும்பவில்லை. என்றாலும் இவர்களில் சிலர்  முதல்வர் கனவில் இருந்து விடுபட விரும்பவில்லை.
 தேர்தலில் முதன் முதலாக வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் அதிகமானோர்   அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு வக்களிக்கப்போவதகத் தெரிவித்துள்ளனர். இதனால் அக்கட்சியின் வாக்கு வங்கி அதிகாரிக்கு நிலை தோன்றியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  35.62  சதவீதமானோரும்    திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கு 27.41 சதவீதமானோரும் வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இக்கருத்துக கணிப்பு மகிழ்ச்சியடையச்செய்துள்ளது   7.78சதவீதத்துடன்  பட்டாளி மக்கள் கட்சி மூன்றாவது இடத்திலும்  6.68 சதவீதத்துடன் விஜயகத்தின் கட்சி நான்காவது இடத்திலும் உள்ளன. பாரதீய ஜனதாக் கட்சி மட்டும் ஐந்து சதவீதத்துக்கு அதிகமான பெற்றுள்ளது ஏனைய கட்சிகள் எல்லாம் ஐந்துசதவீதத்துக்குக் குறைவான ஆதரவையே பெற்றுள்ளன.

இதேவேளை நம்ம அடையாளம் நடத்திய கருத்துக் கணிப்பில் விஜயகாந்தும் காங்கிரஸும்  திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைய வேண்டும் என அதிகமானோர் கருத்துத் தெரிவித்தனர்.  திராவிட முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிட்டால். பெரும்பான்மைக்கு ஆறு தொகுதிகள் குறைவாக 112தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிய வருகிறது.  விஜயகாந்துடன்  இனைந்தால் 103 தொகுதிகளிலும், காங்கிரஸுடன் இணைந்தால்   152தொகுதிகளிலும் திராவிட முன்னேற்ற‌ரக் கழக‌ம் வெற்றி பெறும். மூன்று கட்சிகளும் சேர்ந்தால்  201 தொகுதிகளில் வெற்றி பெறலாம்.


 நம்ம அடையாளம் கருத்துக்கணிப்பு அண்ணா  திராவிட முன்னேற்ற‌ரக் கழகத்துக்கு பலத்த அடி கிடைக்கும் என கூறுகிறது.  திராவிட முன்னேற்ற‌ரக் கழகம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் விஜயகாந்த் இணைந்தால் 20 மாவட்டங்களில் ஒருதொகுதியில் கூட அண்ணா திராவிட முன்னேற்ற‌ரக் கழகம் வெற்றி பெற முடியாது. 33 தொகுதிகள்தான் திராவிட முன்னேற்ற‌க் கழகத்துக்கு சாதகமான தொகுதிகள் என கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது.

திராவிட முன்னேற்ற‌க் கழகத்துடன் இணைவதையே விஜயகாந்தின் கட்சியில் உள்ளவர்கள் விரும்புகிறார்கள். அஆல் விஜயகாந்தும் அவரின் மனைவியும் திராவிட முன்னேற்ற‌க் கழகத்துடன் சேர்வதை விரும்பவில்லைதமது  திருமண மண்டபத்தை  கருணாநிதியின்  அரசு  இடித்ததை  அவர்கள் இன்னமும் மறக்கவில்லை. அதற்காகத்தான் ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர்ந்து  பழிவாங்கினர்கள்.  கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்ற‌க் கழகத்தின் பிரதம பேச்சாளராகக் களம் இறங்கிய வடிவேல் பேசியவை எல்லாம் திரைப்படத்தி கட்சிகள் போல் அவர்கள் மனதில் வந்து போகின்றன. பழைய சங்கதிகளை மனதில் வைத்திருந்தால் அரசியல் நடத்த முடியாது என்பதை விஜயகாந்த்  இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.கூட்டணி சேர்ந்து  போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாத  பாரதீய ஜனதாவுடன் சேர்வதையே விஜயகாந்த் விரும்புகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்டபின் கூட்டணி கட்சிகள்  உறுதியான பின்னர் கருத்துக் கணிப்புகள் வேறுபடலாம். சில கருத்துக் கணிப்புகள் அரசியல் தலைவர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைவதுண்டு. திட்டமிட்டு சரியான கூட்டணி அமைக்கும் தலைவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
வர்மா
தமிழ்த்தந்தி
07/02/16

No comments: