Saturday, February 20, 2016

செக் வைத்தார் கருணாநிதி தடுமாறுகிறார் விஜயகாந்த்

திராவிட முன்னேற்றக் கழக‌மும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியை உறுதிசெய்ததானால்  தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. யாரும் வரலாம் உட்கார்ந்து பேசலாம் என காத்திருந்த  திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு காங்கிரஸின் வருகை புதுத் தெம்பை அளித்துள்ளது.

 சுப்பிரமணியன் சுவாமி கடந்த வரம் செய்த அரசியல்  காய் நகர்த்தலின் காரணமாக  திராவிட முன்னேற்றக் கழக‌மும் காங்கிரஸும்  அவசர அவசரமாக கூட்டணியை உறுதி செய்தன. திராவிட முன்னேற்றக் கழக‌மும் பாரதீய ஜனதாவும் சேரும் இதனுடன் விஜயகாந்த் இணைவார்.  ஸ்டாலின் முதல்வராவார் என சுப்பிரமணியன் சுவாமி அரசியல் குட்டையைக் குழப்பியதால் இனியும் தாமதித்தால் விபரீதமாகிவிடும்  என்பதை உணர்ந்த கருணாநிதி, காங்கிரஸின் கையை கெட்டியாகப் பிடித்தார். பத்து வருட ஆட்சி சுகத்தை அனுபவித்த  திராவிட முன்னேற்றக் கழக‌மும் காங்கிரஸ் கட்சியும்  இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்  தனித் தனியாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தன. திராவிட முன்னேற்றக் கழக‌த்தைப் படுகுழியில் விழுத்த காங்கிரஸ் தலைவர்கள் தோண்டிய குழியில் இரண்டு கட்சிகளும் எழமுடியாத வகையில் விழுந்தன. பழையன எல்லாவற்றையும் மறந்து அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பதை இரண்டு கட்சித்ட் தலைவர்களும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

அண்ணா  திராவிட முன்னேற்றக் கழக‌தத்க்கு எதிராக பலமான கூட்டணி அமையக்கூடாது என விரும்பிய ஜெயலலிதா அதிர்ச்சியடைந்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழக‌ம், காங்கிரஸ்,பாரதீய ஜனதா,மக்கள் நலக் கூட்டணி  ஆகியன தனியாகப் போட்டியிட்டால்  மீண்டும் முதல்வாராகலாம்  என நினைத்த ஜெயலலிதாவின் எதிர் பார்ப்பில்  மண் விழுந்துள்ளது. அண்ணா  திராவிட முன்னேற்றக் கழக‌த்தைத் தவிர ஏனைய கட்சித்தலைவர்கள் கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடத்தினர்.தகுதிக்கு  மீறி அதிக தொகுதிக்கு ஆசைப்பட்டதனால் பேச்சு வார்த்தைகள் எவையும் முற்றுப் பெறவில்லை.
திராவிட முன்னேற்றக் கழக‌மும் காங்கிரஸும் கூட்டணி சேர்ந்ததனால் விஜயகாந்த் போக்கிடம் இல்லாது  நிற்கிறார். திராவிட முன்னேற்றக் கழக‌த்ஹ்டிடம் அதிக தொகுத்தியும் துணை முதல்வர் பதவியையும் விஜயகாந்த் எதிர்பார்த்தார். விஜயகாந்த் எதிர்பார்த்த அளவுக்கு மிஞ்சிய தொகுதிகளைக் கொடுக்க  திராவிட முன்னேற்றக் கழக‌ம் சம்மதிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் இணைய விஜயகாந்தின்  மைத்துனர் சதீஷ் ஆர்வமாக இருந்தார். அனல் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் பேச்சு எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. விஜயகாந்த் இல்லைஎன்றால் வெற்றி பெற முடியாது என்ற மாயையில் பிரேமலதாவின் வெட்டித்தனமான பேச்சு கண்ணியத்தை இழந்தது.

  திராவிட முன்னேற்றக் கழக‌ம், பாரதீய ஜனதா, மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்று தெரிவு விஜயகாந்தின் முன்னால் இருந்தது. இப்போளுத்டும் விஜயகாந்த் வந்தால் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் கருணாநிதி இருக்கிறார்.  இரண்டு ஊழல் கட்சிகள் எதற்காக இணைந்தன என்று பிரேமலதா கேட்டதனால்  திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் பக்கம் விஜயகாந்த் செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது. பாரதீய ஜனதா மக்கள் நலக் கூட்டணி எனும் இரண்டு தெரிவுகள் விஜயகாந்தின் முன்னால் உள்ளன. தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத பாரதீய ஜனதாவுடன் சேர்வதில்  பிரயோசனம் இருக்காது என்பதை விஜயகாந்த் அறிவார். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள வைகோ,திருமவளவன், இடதுசாரித் தலைவர்கள்  ஆகியோரின் பிரசாரங்கள் மக்களிடம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. 
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக மக்கள் நலக் கூட்டணி ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் செல்வாக்கு  குறைந்துள்ளது. அண்மையில் வெளியான கருத்துக்கணிப்புகளும் இவற்றின்   வீழ்ச்சியை வெளிக்காட்டி  உள்ளன. கூட்டணி சேர்வதா இல்லையா என்ற குழப்பத்தில் வியஜகாந்த் இருக்கிறார். வியகந்தின் வெற்றியின் பின்னால் பன்ருட்டி ராமச்சந்திரனின் பங்களிப்பு அதிகம் இருந்தது. சிக்கலான  நேரத்தில் அவரின் ஆலோசனைகள்    விஜயகாந்த்தை   சரியான பாதைக்கு அழைத்துச்சென்றன. பன்ருட்டியார் விஜயகாந்தை விட்டு விலகிச்சென்றுவிட்டார். விஜயகாந்தை வழிநடத்தும் பக்குவம் உடைய அரசியல் தலைவர் அவரின் பக்கத்தில் இல்லை


விஜயகாந்தும் அவரின் மனைவிவும் மட்டுமே அக்கட்சியின் பிரதம பேச்சாளர்கள். கடந்த சட்ட சபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் புண்ணியத்தால் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.தனது வகுப் பலத்தினால்தான் ஜெயலலிதா முதல்வரானார் என விஜயகாந்த்  தவறாக நினைத்து விட்டார்.  திராவிட முன்னேற்றக் கழக‌ம்  அழைத்தபோது சென்றிருந்தால்  மதிப்பு இருந்திருக்கும். காங்கிரஸ் முதலில் போய் ஓட்டிக்கொண்டதனால் விஜகந்த கடுப்பாகி உள்ளார். இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் பேச்சு வார்த்தை நடத்தினால்  பேரம் பேச முடியாது கொடுப்பதை வாங்க வேண்டிய இக்கட்டான நிலையில் விஜயகாந்த் இருக்கிறார். 
கண்ணுக்கு தெரியும் தூரத்தில் எதிரிகள் இல்லை என கர்ச்சித்த ஜெயலலிதா கூட்டணி பற்றிச் சிந்திக்கத் தொடங்கி விட்டார். பாரதீய ஜனதாவைத் தவிர வேறு பெரிய கட்சிகள் எவையும் ஜெயலலிதாவுடன் கூட்டணி  சேரத் தயாராக இல்லை. விஜயகாந்துடன் சேர்ந்தால் வெற்றி பெறமுடியாது எனத் தெரிந்து கொண்டும் அவரின் வருகைக்காக பாரதீய ஜனதா காத்திருக்கிறது. விஜயகாந்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயமில்லை என்பது பாரதீய  ஜனதாக் கட்சித்தலைவர்களுக்குத் தெரியும். அண்ணா   திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் இணைந்தால் அதிர்ஷ்டக் காற்றில்  உயரே செல்லலாம்   என்பது நிச்சயம். இந்த இடைவெளியில் ஜெயலலிதா அழைப்பு விடுத்தால் பாரதீய ஜனதா சந்தோசத்துடன் சென்றுவிடும் 

விஜயகாந்தின் மனதில் என்ன இருக்கிறது என்பதை ஊகிக்க முடியாது. தனது செல்வாக்கை பகிரங்கப் படுத்த வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார். சந்தர்ப்பம் பார்த்து முடிவெடுக்த் தவறியதால் விஜயகாந்த் தனித்து விடப்பட்டுள்ளார்.  மக்கள் நலக் கூட்டணியைத்தவிர விஜயகாந்துக்கு வேறு தெரிவு  இல்லை. அவர் கூட்டணி பற்றி பகிரங்கமாக அறிவிப்பாரா அல்லது மீண்டும் தனித்துப் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு அவர் விரைவில் பதில் கூற வேண்டும். விஜயகாந்தின் முடிவிலேதான் அவரது கட்சியின் எதிர்காலம் தங்கி உள்ளது.

காங்கிரஸ் கட்சியுடனான  உறவை 2013 ஆம் ஆண்டு  திராவிட முன்னேற்றக் கழக‌ம் முறித்துக் கொண்டது.  இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் நியாயமாக நடக்கவில்லை என நொண்டிச்சாக்கு சொன்னார் கருணாநிதி. 2ஜி  முறைகேட்டை  திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு எதிரான திறன துருப்புச் சீட்டாக காங்கிரஸ் பகிரங்கப்படுத்தியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ஊழல் புகார் வலுப்பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தை   வீழ்த்த காங்கிரஸ் விரித்த வலையில் இரண்டு கட்சிகளும் விழுந்தன. நாடாளு மன்றத் தேர்தலில் மரண அடி  வாங்கியதனால்   இணைய வேண்டிய முக்கியத்துவத்தை இரண்டு கட்சித்தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும்  காங்கிரஸும் இணைந்து போட்டியிடப்போவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சு  வார்த்தை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.  ஜெயலலிதாவை பதவியில் இருந்து அகற்றுவதே இரண்டு கட்சிகளினதும் முக்கிய நோக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் கொடுப்பதை வங்கி வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது. கடந்த சட்ட மன்றத் தேர்தலின் பொது திராவிட முன்னேற்றக் கழகத்தை நோகடித்த காங்கிரஸ் கட்சி இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கி ஒடுங்கி இருக்கிறது. 

ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் பதவி, முக்கிய அமைச்சுக்கள் என வீர வசனம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள்  மூசுப்  பேச்சில்லாமல் அமைதியாக இருக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை வெறுத்த ராகுல் தமிழக அரசியல் நிலைவரத்தை உணர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணிக்கு பச்சைக் கொடி  காட்டினர். தேர்தல் காலத்தில் அதிரடியாக வியூகம் அமைக்கும் ஜெயலலிதா இம்முறை பின்தங்கி விட்டார். கருணாநிதி முந்தி விட்டார். அரசியல் சித்து விளையாட்டு காட்டும் விஜயகாந்துக்கும் தெளிவான சமிக்ஞை காட்டப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் குளம் நபி ஆஸாத், முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் இலங்க்கொவர்ன் ஆகியோர் கோபாலபுரத்தில் கருனநிதியைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர்.கருணாநிதியுடன் ஸ்டாலினும் கனிமொழியும் உடனிருந்தனர். இளங்கோவன்,தங்கபாலு, குமரி அனந்தன் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை செய்தபின்னரே பொதுச்செயலாளர்கள்  கருணாநிதியைச் சந்தித்தனர்.   காங்கிரஸுக்கு 50 தொகுதிகள் வேண்டும் என அவர்கள் ஆலோசனை கூறினார். 50தொகுத்திளை விட்டுக்கொடுக்க திராவிட முன்னேற்றக் கழக‌ம்   தயாராக இல்லை.25 தொகுதிகள் தன கிடைக்கும் என சூசகமாக திராவிட முன்னேற்றக் கழக‌ம் தெரிவித்துள்ளது.  30 தொகுதிகளையாவது கேட்டுப்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.  கூட்டணி சேர்ந்தாலே போதும் எனற மன நிலையில் உள்ள ராகுல் இருக்கிறார். ஆகையினால் தொகுதி பற்றிய பேரம் எதனையும் பேசுவதற்கு அவர் விரும்பவில்லை.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஸ்டாலினைச் சந்தித்தபோதே கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. சுப்பிரமணியன் சுவாமி தூண்டி விட்டாலும் பாரதீய ஜனதாவுடன் சேர்வதற்கு ஸ்டாலின் விரும்பவில்லை. இஸ்லாமிய கிறிஸ்தவ வாக்குகள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக இருக்கும் என்பது வெளிப்படையனது. பாரதீய ஜனதாவின் தலைமையிலான கூட்டனியல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. கூட்டனிக் கட்சிகளும் படு தோல்வியடைந்தன. தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத கட்சியுடன் சேர்வதற்கு திராவிட முன்னேற்றக் கழக‌ம் விரும்பவில்லை.

தேர்தலுக்கு வெற்றி பெறுவதற்கு  பலமான கூட்டணி  மிக முக்கியம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  தலைவர் காதர்  மொகிதீன்  கோபாலபுரம் சென்று கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது தந்து கட்சி கூட்டனியில் தொடரும் என உறதி செய்தார். புதிய தமிழக கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் பேச்சு வார்த்தை  நடைபெறுகிறது. ஆகவே இது வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என கருணாநிதி நம்புகிறார்.
வர்மா
தமிழ்த்தந்தி
21/02/16

No comments: