Tuesday, May 26, 2015

கைகொடுக்குமா கர்நாடகம்?

தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களின் பார்வை கர்நாடகத்தை நோக்கி திரும்பி உள்ளது. அங்கிருந்து நல்ல செய்திவராதா என அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.நீதிபதி  குமாரசாமி ஜெயலலிதாவை விடுதலை செய்தாலும்  தமிழக அரசியல் தலைவர்கள் அவரை விடுவதாக இல்லை.அப்பீல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் கர்நாடகத்துக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக்கட்சிகளும் ஜெயலலிதா நிரபராதி என்பதைக்  கொண்டாடுகிறார்கள். மற்றவர்கள் அவரைக்  குற்றவாளி என்றே கருதுகிறார்கள்.

ஜெயலலிதா நிரபராதிஎன அவிவுக்கப்பட்டதும்  பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்ஜெயலலிதவின் பதவி ஏற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும்தமிழக பாரதீய ஜனதாக் கட்சித்தலைவர்க்ளும் கலந்து கொண்டு ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்தினர். இந்தச்சம்பவங்கள் அரசியல் அரங்கில் சந்தேகக்கண் கொண்டு நோக்கப்படுகிறது.

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட வழக்கில் அப்பீல் செய்யும் உரிமை கர்நாடக அரசுக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் மட்டுமே உள்ளது..  ஆகையினால் தான் தமிழகத்தலைவர்கள் கர்நாடகத்துக்குநெருக்கடி கொடுக்கிறார்கள்  இரண்டு  தரப்பையும் தவிர மற்றையவர்களும் அப்பீல் செய்யலாம் என சட்டம் இருந்தால் நூற்றுக்கும் அதிகமானவர்கள் அப்பீல் செய்திருப்பார்கள்.ஆகையினால் கந்நாடகத்தின்   தயவை எதிர் பார்க்கிறார்கள்.

எடுகோள்கள் பலவற்றுடன் கருணாநிதி கர்நாடகத்துக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். விஜயகாந்தும் தன் பங்குக்கு அப்பீல் செய்யும் படி அதிகாரத்துடன் கோரிக்கை விடுத்துள்ளார். ராமதாஸ் ஒருபடிமுன்னேறி  தனது கட்சித்தலைவர் கோசி மணியை கர்நாடகத்துக்கு அனுப்பி முதலமைச்சர் சித்ராமையாவை சந்திக்கவைத்தார். தமிழக நெருக்கடிகளால் கடுப்பாகிய கர்நாடக முதல்வர் எங்களுக்கு யாரும் அறிவுரை சொல்ல வேண்டாம் சட்டப்படி நாம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்க்கில்  இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்ய   வேண்டும் என அரச தரப்பு வழக்கறிஞராக வாதாடிய ஆச்சார்ய பரிந்துரை செய்துள்ளார். கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிக்குமாரும் இதே கருத்தை சிபார்சு செய்துள்ளார். கர்நாடக எதிர்க்கட்சியான பாரதீய  ஜனதா மெளனமாக இருக்கிறது. ஜெயலலிதாவின் வழக்கு விவகாரத்தில் கர்நாடக  அரசு முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறது. இரண்டுமுறை அமைச்சரவைகூட்டம் நடைபெற்றும் முடிவெடுக்காமல் கலைந்தது.


ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்ய வேண்டும் என சில அமைச்சர்கள் விரும்புகிறார்கள். ஆனால் சில அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. டில்லியில் இருக்கும் மேலிடம் அதிக ஆர்வம் காட்டாமல் தள்ளி நிற்கிறது. நாடாளுமன்றத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக்கழக எம்பிக்களின் பலம் மறைமுகமாக ஜெயலலிதாவுக்கு உதவி புரிகிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. தீர்ப்பு பிழை என்ற ஐயப்பாடு சகலதரப்பிலும் இருந்து எழுந்துள்ளது.இச்சந்தேகத்தை தீர்க்கவேண்டிய பாரிய பொறுப்பு கர்நாடக அரசுக்கு உள்ளதுஅப்பீல் செய்யவில்லை என்றால் அது ஊழலுக்கு துணை போகிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கு அரசியல் பழிவாங்கல் என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது. ஆகையினால் இந்த வழக்கு மிக பிரபலமானது.வருமானத்துக்கு அதிகமாக பத்து சதவீத சொத்து இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள பொது மக்கள் தயாராக இல்லை. அப்பாவி மக்களின் சந்தேகத்தை கர்நாடக அரசு தெளிவு படுத்த வேண்டும்.

கர்நாடகம் அப்பீல் செய்யும் வரை பார்த்திருக்க முடியாது திராவிட முன்னேற்றக்கழகம் அப்பீல் செய்யும் என  கருணாநிதி அறிவித்துள்ளார்ஜெயலலிதாவை விடமாட்டேன் அப்பீல் செய்யப்போகிறேன் என சொத்துக்குவிப்பு வழக்கின் சூத்திரதாரி சுப்பிரமணியன் சுவாமி  கூறி உள்ளார். பாரதீய ஜனதாக்கட்சியின் முக்கிய பிரமுகராக வலம் வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அவர் சார்ந்த கட்சி ஜெயலலிதாவை பகிரங்கமாக ஆதரிக்கிறது. கட்சியின் கொள்கைக்கு எதிர் மாறாக அவர் செயற்படுகிறார்.

ஜெலலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்யப்படுவது உறுதியாகி விட்டது.யார் முதலில் அப்பீல் செய்வார்கள் எப்படி அப்பீல் செய்வார்கள் என்ற விபரம் தெரியவில்லை.ஜெயலலிதா பதவி ஏற்கமுன்பு அப்பீல் செய்திருந்தால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும்.அப்பீல் அவரின் பதவிக்கு அச்சுறுத்தலாக இருக்காது . என்பதால் அவர் தெம்பாக உள்ளார்  என்றாலும் இராஜினாமாக் கடிதத்தை தயாராக வைத்திருக்கும் படி சுப்பிரமணியன் சுவாம் கிலி எழுப்பி உள்ளார்.அப்பீல் செய்யப்படுவது உறுதிஎன்பதை அறிந்த ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

No comments: