Saturday, May 23, 2015

அந்த 217 நாட்கள்

  
  தமிழக முதல்வராக ஜெயலலிதா ஐந்தாவது முறை பதவி ஏற்றுள்ளார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் குறவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் அரசியல் அஸ்தமித்து விட்டது என்று நினைத்தவர்கள் ஏமாந்து விட்டனர். ஜெயலலிதா அப்பீல் செய்வார் தண்டனை நிச்சயம்  என கணக்குப் போட்டவர்களுக்கு  நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.  நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு தவறு என தமிழக அரசியல் தலைவர்கள் வரிந்து கட்டி வரிசையில் தமது கருத்துக்களை வெளியிட்டார்கள். கருத்துக்களை  எல்லாம் காற்றில் பறக்கவிட்டு ஜெயலலிதாவை முதல்வராக்கினார் ரோசய்யா

ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டதில் இருந்து விடுதலையாகும்  வரை தமிழக அரசு இயந்திரம் முடங்கியது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவரின்  பார்வை பெங்களூரில் குத்தி நின்றது. ஜெயலலிதாவின் விடுதலைக்காக என்ன எல்லாம் செய்ய வேண்டும் எனத் திட்டமிடாது  மனதில் பட்டதை எல்லாம் செய்தார்கள்.ஜெயலலிதா விடுதலையானதும் தங்கள் பிரார்த்தனை பலித்து விட்டதாகக் கொண்டாடினார்கள்.

ஜெயலலிதாவின் அரசியல் அஸ்தமித்துவிட்டதாகக் கருதி முதல்வர் கனவில் இருந்தவர்கள் கனவில் இருந்து விழித்தெழுந்தனர். நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு முறை பதவியை இழந்த ஜெயலலிதா இரண்டு முறையும்   நிரபாராதி என விடுதலை செய்யப்பட்டு மீண்டும் முதல்வரானார். இந்திய அரசியல் வரலாற்றி இப்படி ஒரு சம்பவம்நடைபெற்றதில்லை இனியும் நடைபெறப்போவதில்லை
தேர்தலில் ஜெயித்து வெற்றியடைந்தாலெ ஜெயலலிதாவின் கோபத்தை தாங்க முடியாது.நீதிமன்றமே அவரை விடுதலை செய்ததனால் அடுத்த அவரின் நடவடிக்கை எப்படி இருக்கும் எனக் கணிக்கமுடியதுள்ளது.

ஜெயலலிதாவின் பதவி ஏற்பினால் சென்னையே ஸ்தம்பித்தது. பத்தாயிரத்துக்கும் அதிகமன பதாகைகள் நகரெங்கும் கட்டித்தொங்கவிடப்பட்டன.இதற்காக ஒருகோடிக்கும் அதிகமாகசெலவு செய்யப்பட்டது..மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் ரஜினி உட்பட பலர் பதவி ஏற்பு வைபவத்தில் கலந்து கொண்டனர். சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்மிக எளிமையாக பதவி ஏற்கும் வைபவம் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தொண்டர்கள் அட்டகாசமாக நடத்திமுடித்து விட்டனர்.

ஆறுமாதம் ஜெயலலிதா முதல்வராக பணிஆற்றலாம் அதற்கிடையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.217 நாட்கள்முடிந்து விட்டது. இன்றிலிருந்து ஆறுமாத காலக்கெடு ஆரம்பித்து விட்டது.

No comments: