Monday, March 2, 2015

சவாலே சமாளி



உலகக்கிண்ண கிரிக்கெற்றில் தொடர்ந்து அதிர்ச்சியைக்கொடுத்துவரும் அயர்லாந்தும் சிம்பாப்வேவும்நாளை சவாலை சந்திக்கப்போகின்றன.2007 ஆன் ஆண்டு பாகிஸ்தான். 2011 ஆம் ஆன்டு இங்கிலாந்து ஆகிஒயன அயர்லாந்தின்  அலையில் வீழ்ந்தன. 2015 ஆம் ஆண்டுமேற்கு இந்தியத்தீவுகள் சிக்கி சின்னாபின்னமாகியது.

அயர்லாந்து இரண்டு போட்டிகளிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. மேற்கு இந்தியத்தீவுகள் 304 ஓட்டங்கள் அடித்து வெற்றி என‌ இறுமாப்பில் இருந்தது. 307 ஓட்டங்கள் விரட்டி அடித்து வெற்றிபெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 278ஓட்டங்கள் அடித்தபோதும் விரட்டி 279 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. கால் இறுதியில் கால் பதிக்கும் கனவில் உள்ளது அயர்லாந்து.

இந்தியாவிட‌ம் தோல்விய‌டைந்த‌பின்ன‌ர் எழுச்சி க‌ண்டு சிம்பாப்வேயையும் மேற்கு இந்திய‌த்தீவுக‌லையும் வீழ்த்தி த‌ன்து ப‌ல‌த்தை வெளிப்ப‌டுத்திய‌து தென்.ஆபிரிக்கா.மேறு .இந்திய‌த்தீவுக‌ளுக்கு எதிரான‌ போட்டி எதிர‌ணிக‌ளை க‌ல‌ங்க‌டித்த‌து. தென். ஆபிரிக்காவின் அதிர‌டியை ச‌மாளிக்கும்  அய‌ர்லாந்து.


No comments: