Tuesday, January 20, 2015

பீட்டர்சன் உடலில் உலகப்படம்


உடலில் பசை குத்தும் கலாசாரம் உலகில் வேகமாகப்பரவி வருகிறது. விளையாட்டுவீரர்கள்,நடிகர்கள்,பாடகர்கள் ஆகியோர் தம்து உடலில்  பச்சை குத்திஉள்ளனர். அவர்களைப்பார்த்து ரசிகர்களும் பச்சை குத்தத் தொடங்கி விட்டனர்.

பெக்கம்,நெய்மர்,பீட்டர்சன் ஆகியோர் பச்சைகுத்துவதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள்.  நடிகைகளான நயனதாரா,குஷ்பு ஆகியோரும் தமது உடலில் பச்சை குத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

பீட்டர்சன் தந்து உடலில் உலகப்படம் வரைந்து அசத்தி உள்ளார். டெஸ்ட் போட்டியில் 23 செஞ்சரிகளும்,ஒரு நாள் போட்டியில் 9 செஞ்சரிகளும் அடித்த பீட்டர்சன்  தந்து செஞ்சரிகளை நினைவு படுத்தும் வகையில் உடலில் பச்சை குத்தி உள்ளார். செஞ்சரி அடித்த மைதானங்களை சிவப்பு மையால் அடையாளப்படுத்தி உள்ளார்.

டெஸ்ட்  போட்டியில்  செஞ்சரி அடித்த இங்கிலாந்து,அவுஸ்திரேலியா,இந்தியா,நியூஸிலாந்து,பாகிஸ்தான்,மேற்கு, இந்தியத்தீவுகள்,இலங்கை ஒருநாள்போட்டியில் செஞ்சரி அடித்த தென்.ஆபிரிக்கா, மேற்கு.இந்தியத்தீவுகள்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,துபாய் ஆகிய நாடுகள் சிவபு மையால் அடையளப்படுத்தப் பட்டுள்ளன. பச்சை குத்துவதில்  பிரபல்யமான மக் ஸ்குரில்ஸ் என்பவரே  பீட்டர்ஸனில் உடலில்  உலகப்படத்தி பச்சை குத்தி உள்ளார்.

No comments: