Thursday, March 21, 2013

மத்திய அரசை மிரட்டிய மாணவர் போராட்டம்


இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பித்தபிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும்என்று தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதிலளிக்க இந்திய அரசு  தயங்கி வரும் வேளையில் தமிழக மாணவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் தனது வழமையான அரசியலையே மத்திய அரசு முன்னெடுத்தது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி,  இடது சாரிக் கட்சிகள் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய நாடாளுமன்றத்திலும் லோக் சபாவிலும் இலங்கைக்கு  எதிராகப் பேசிய பேச்சுக்களை    கிடப்பில் போட்டது மத்திய அரசு. மத்திய அரசின் செயற்பாட்டினால் விசனமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்து  தமது விசனத்தை வெளிக் காட்டினர். அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கள் ஒருவரையறைக்குட்பட்டதாகவே உள்ளன. தமிழக அரசியல் கட்சிகளின் வசம் இருந்த இலங்கைக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் தம் கைகளில் எடுத்துள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் செயற்பாட்டில் திருப்தியடையாத  சென்னை லயோலாக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். உண்ணாவிரதம்இருந்தமாணவர்கள்பொலிஸாரினால்வலுக்கட்டாயமாகஅப்புறப்படுத்தப்பட்டனர். தமிழக அரசின் அடாவடியினால் கிளர்ந்தெழுந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தமிழீழ தனி அரசுக்கான பொது வாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை ஆகியவற்றை முதன்மைப்படுத்தி தமிழீழ விடுதலைக்கான  மாணவர் கூட்டமைப்பு போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியது. மாணவர் போராட்டங்கள்  தினமும் வலுவடைவதைக் கண்ட தமிழக அரசு, அரச  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. அரசு அறிவித்த விடுமுறையையும் கருத்தில் எடுக்காத மாணவர்கள் தமது போராட்டங்களை வலுப்படுத்தினர். பொது இடங்களிலும் கல்லூரி வ ளாகங்களிலும் உண்ணாவிரதமிருந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதைத் தெரிந்தும் மேலும் பல மாணவர்கள்  உண்ணாவிரதம்  இருந்தனர்.

தமிழக மாணவர்களின்  போராட்டம் இந்திய மத்திய  அரசை  கிலி கொள்ள வைத்தது. சென்னை, புதுவை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், காஞ்சிபுரம், பெரும்பலூர், சேலம், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை,  கேவில்பட்டி ஆகிய நகரங்களில் மாணவர் போராட்டம்  உச்சமடைந்தது.  கோவை சட்டக் கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின்  எட்டு மாணவர்களும்  புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் 40 மாணவர்களும்  சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம்  இருக்கின்றனர். பாடசாலை  வளாகத்தில் இருந்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.

சென்னை ஆளுநர் மாளிகை,  சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம், சென்னை விமான நிலையம் ஆகியவற்றை முற்றுகையிட முனைந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்களின் எழுச்சிமிக்க இப் போராட்டத்தை கடுமையான முறையில் அடக்க முடியாத நிலையில் உள்ளது தமிழக அரசு.  மாணவர்கள் மீது வன்முறை பிரயோகித்தால் அதன் பின் விளைவு மிகப் பாரதூரமானதாக இருக்கும் என்பதை தமிழக அரசும் மத்திய அரசும் மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளன. மாணவர்களது  இந்தப் போராட்டத்தை  தமிழக அரசியல் கட்சிகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன.

அரசியல்  பின்புலம் எதுவும்  இல்லாமல் மாணவர் நடத்தும் போராட்டங்களினால்  சில  இடங்களில்  இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. முன் அறிவித்தல் இன்றி மாணவர்கள் நடத்தும் போராட்டங்களினால் பொலிஸார் திக்கு முக்காடி வருகின்றனர். ஊர்வலம் சென்ற மாணவர்களைப் பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் நடு வீதியில் மாணவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வரும் இவ்வேளையில்  திராவிட  முன்னேற்றக் கழகம் தனது கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்துள்ளது. இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற திருத்தத்தை இந்தியா கொண்டு வர வேண்டும், இலங்கைப் போர்க்  குற்றம் தொடர்பாக சர்வதேச  சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும், குறுகிய கால வரம்புக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்த திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சிக்குக் கெடு வைத்துள்ளது. இக்கோரிக்கைகளை மத்திய அரசு  புறந்தள்ளினால் மத்திய  அமைச்சரவையிலிருந்தும் கூட்டணியிலிருந்தும் வெளியேறப் போவதாக கருணாநிதி மிரட்டியு னார். 
கருணாநிதியைத் திருப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர்களான ஏ.கே. அந்தோனி, குலாம் நபி ஆசாத், ப. சிதம்பரம் ஆகியோர்  கடந்த திங்கட்கிழமை தமிழகத்துக்கு விரைந்தனர். கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் வழமை போன்று சோனியா  முடிவெடுப்பார் எனக்  கூறிவிட்டுப் புறப்பட்டுச்  சென்றனர். மத்திய அரசு உறுதியான ஒரு முடிவை எடுக்காததினால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாநிதி திடீரென அறிவித்தார். 

திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையே இதுவரை நடைபெற்று வந்த பனிப்போர் பகிரங்கத்துக்கு வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு உண்ணாவிரத  நாடகம் ஆடிய கருணாநிதி இப்போது கூட்டணியிலிருந்து விலகுவதாகஅறிவித்துள்ளார்.ஐக்கிய முற்போக்குக்கூட்டணிக்கானதனது ஆதரவை விலக்குவதாக திராவிடமுன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கடித்தைக்கொடுத்தனர். திராவிட முன்னேற்றக்கழக அமைச்சர்களும் தமது இரஜினாமாக்கடிதங்களை பிரதமரிடம் கொடுத்தனர்.இதனால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது.   ஜனநாயக முற்போக்கு  கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறியதால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு  எந்தவிதமான ஆபத்தும் ஏற்படப் போவதில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் 18 பேர் உள்ளனர். இவர்களுடன் திருமாவளவனும் வெளியேறிவிட்டார்.  முலாயம், மாயாவதி ஆகியோரின் ஆதரவுடன் எஞ்சிய காலத்தை காங்கிரஸ் பூர்த்தி செய்து விடும். இலங்கைப் பிரச்சினையை முன்வைத்து இரண்டு தடவை தமிழக அரசைப் பறிகொடுத்த கருணாநிதி இப்போ மத்திய  அரசில் இருந்து வெளியேறி உள்ளார். தனது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றினால் மறு பரிசீலனை செய்யத் தயார் என குண்டொன்றைத் தூக்கிப் போட்டுள்ளார்.

மத்திய அரசைப் பணிய வைப்பதற்குரிய சந்தர்ப்பங்களைத் தவறவிட்ட கருணாநிதி காலம் தாழ்த்தி முடிவெடுத்துள்ளார்.

Wednesday, March 20, 2013

புதிய சாதனைகளூடன் இந்தியா வெற்றி



அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்களினால் வெற்றி பெற்ற இந்தியா சாதனை படைத்துள்ளது.

  இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ஷேவக், கம்பீர் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு முரளி விஜய், ஷிகார் தவான் ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக்களம் இறங்கினர்.இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஷேவக், கம்பீர் இருவரும் இல்லாத நிலையில் புதிய வீரர்கள் இருவரும் எப்படி முகம் கொடுப்பார்கள் என்ற எதிர் பார்ப்பு எழுந்தது. அனுபவ வீரர் ஒரு முனையில் நிற்கும்போது, அவரின் வழி காட்டலோடு அறிமுக வீரர் மறு முனையில் களம் இறங்குவதே வழமையான நடை முறை.அனுபவம் இல்லாத முரளி விஜயுடன் ஜோடி சேர்ந்த தவான் தயக்கம் எதுவும் இன்றி அவுஸ்திரேலியப் பந்து வீச்சாளர்கலைப் பந்தாடினார்.
  டோனி வ‌குத்த‌ வியூக‌த்தை விஜ‌யும் த‌வானும் க‌ன‌க‌ச்சித‌மாக‌ நிறைவேற்றின‌ர். விஜ‌யுட‌ன் இணைந்தும் த‌னியாக‌வும் ப‌ல‌ சாத‌னைக‌ளைப்ப‌டைத்துள்ளார் அறிமுக‌வீர‌ர் த‌வான். ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு  எதிராக‌க் க‌ள‌ம் இற‌ங்கிய‌ த‌வான், டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டியில் அறிமுக‌மானார். விஜய் ப‌ந்தை எதிர் பார்த்திருக்க‌ ப‌ந்து வீச்சாள‌ரின் முனையில் நின்ற‌ த‌வான் ஓட்ட‌மெடுக்க‌த்த‌யாரானார். ப‌ந்து ந‌ழுவி விக்கெற்றில் விழுந்த‌து. அப்போது த‌வான் கிரிஸுக்கு வெளியே நின்றார். த‌வான் ஆட்ட‌மிழந்த‌தால் அர‌ங்க‌மே அமைதியான‌து.அவுஸ்திரேலிய‌ அணித்த‌லைவ‌ர் கிளாக் அத‌னைப்பெரிது ப‌டுத்தாது ஆட்ட‌மிழ‌ப்பைக்கோர‌வில்லை.கிளாக்கின் பெருந்த‌ன்மைக்கு த‌ன‌து துடுப்பால் ப‌தில‌டி கொடுத்தார் த‌வான்.   
  டெஸ்ட் தொப்பியை சச்சினிடமிருந்து பெற்றதை பெருமையாகக்கருதுகிறார் தவான்.த‌வானின்ம‌னைவிமுக‌ர்ஜீபெங்காலியைச்சேர்ந்த‌வ‌ர்,ஆங்கிலேய‌ப்பெற்றோருக்குப்பிற‌ந்த‌ முக‌ர்ஜீ அவுஸ்திரேலிய‌க்குடிஉரிமை பெற்று அங்கு  வ‌சிகிறார்.
 விஜ‌ய், த‌வான் ஜோடி முத‌ல் விக்கெற் இணைப்பாட்ட‌த்தில் 287 ஓட்ட‌ங்க‌ள் பெற்று சாத‌னை ப‌டைத்த‌து.க‌வாஸ்க‌ர், சேட்ட‌ன் ச‌வுகான் ஜோடி மும்பை‌யில் அடித்த‌ 192 ஓட்ட‌ங்க‌ளைமுறிய‌டித்த‌துஇந்த‌ஜோடி.மொகாலியில்இங்கிலாந்துக்கு எதிரான‌ டெஸ்ட் போட்டியில் க‌ம்பீர் அடித்த‌ 179 அதி கூடிய‌ ஓட்ட‌ங்க‌ளை முறிய‌டித்த த‌வான் 187 ஓட்ட‌ங்க‌ள் எடுத்தார்.
  சாத‌னைக‌ளின் சொந்த‌க்கார‌ரான‌ ச‌ச்சின் மொகாலிமைதான‌த்திலும்புதிய‌ சாத‌னை ஒன்றை நிலை நாட்டியுள்ளார்.மொகாலியில் ஒன்ப‌து போட்டிக‌ளில் விளையாடிய‌ ட்ராவிட் 735 ஓட்ட‌ங்க‌ள் அடித்தார்.  11 போட்டிக‌ளில் விளையாடிய‌ ச‌ச்சின் 777 ஓட்ட‌ங்க‌ள் அடித்து அச்சாத‌னையை முறிய‌டித்தார்.அவுஸ்திரேலியாவுக்கு  எதிரான‌ 81 வ‌ருட‌ கால‌ டெஸ்ட் போட்டியில் 3 -0 முன்னிலை பெற்ற இந்தியா சாத‌னை செய்துள்ள‌து. 
1993 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக‌வும், 1994 ஆம் ஆண்டு இல‌ங்கைக்கு எதிராக‌வும் அஸாருதீன் த‌லைமையிலான‌ இந்திய‌ அணி 3- 0 க‌ண‌க்கில் வெற்றிபெற்று சாத‌னை புரிந்த‌து. அச்சாத‌னையை டோனி ச‌ம‌ப்ப‌டுத்தியுளார். நான்காவ‌து டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றால் டோனி புதிய‌ச‌த‌னை படைடிப்பார்ர்.

  மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பித்தபோது நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 408 ஓட்டங்களெடுத்தது.சிமித் 92ஓட்டங்களிலும் ஸ்ரொட் 99 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்து சத‌த்தைத்தவறவிட்டனர். இஷாந் சர்மா ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெற்களையும்,அஸ்வின், ஓஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களையும் வீழ்த்தினர். 
 இந்திய அணி முதல்இன்னிங்ஸில்499ஓட்டங்கள்எடுத்தது.ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான விஜயும், தவானும் அவுஸ்திரேலிய வீரர்களைத்துவம்சம் செய்தனர்.தவான் 187,87 பந்துகளில் சதம் அடித்த அறிமுக வீரர் என்ற சாதனை செய்தார்.விஜய் 153,டோனி76,சச்சின் 37 ஓட்டங்கள் அடித்தனர்.சிடில் ஐந்து விக்கெற்களையும், ஸ்ரொட் இரண்டு விக்கெற்றையும்ரெக்கியூஸ்,சிமித்,லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெற்களையும் வீழ்த்தினர்.
 இர‌ண்டாவ‌து இன்னிங்சில் க‌ள‌ம் இற‌ங்கிய‌ அவுஸ்திரேலியா 233 ஓட்ட‌ங்க‌ளில் ஆட்ட‌ம் இழ‌ந்த‌து.புவ‌னேஸ்குமார்,ஜ‌டேஜா ஆகியோர் த‌லா மூன்று விக்கெற்க‌ளையும் அஸ்வின் ,ஓஜா ஆகியோர் த‌லா இர‌ண்டு விக்கெற்களைலையும் வீழ்த்தின‌ர்.
 133 ஓட்ட‌ வெற்றி இல‌க்குட‌ன் க‌ள‌ம் இற‌ங்கியா இந்தியா மூன்று விக்கெற்க‌ளை இழ‌ந்து 136 ஓட்ட‌ங்க‌ள் எடுத்து  வெற்றி பெற்ற‌து. எதிர‌ணியின் முன் வ‌ரிசை வீர‌ர்க‌ளை மிக‌ விரை‌வாக‌ வெளியேற்றும் இந்திய‌ வீர‌ர்க‌ள் க‌டைசி வ‌ரிசை வீர‌ர்க‌ளை வெளியேற்ற‌ சிரம‌ப்ப‌ட்ட‌ன‌ர்.அவுஸ்திரேலியாவின் இறுதி ஜோடி 65 நிமிட‌ங்க‌ள் க‌ள‌த்தில் நின்று 18.4 ஓவ‌ர்க‌ளைச்ச‌ந்தித்து 44 ஓட்ட‌ங்க‌ள் எடுத்த‌து.
  இல‌குவான வெற்றி இல‌க்குட‌ன் க‌ள‌ம் இற‌ங்கிய‌ இந்தியா ச‌ற்று சிர‌ம‌ப்ப‌ட்டே  வெற்றி பெற்ற‌து.த‌வான் காய‌ம‌டைந்த‌தால் விஜ‌யுட‌ன் ஆர‌ம்ப‌த்துடுப்பாட்ட‌வீர‌ராக‌ புஜாரா க‌ள‌ம் இற‌ங்கினார்.விஜ‌ய் 26 ,புஜாரா 28, கோக்லி 38, ச‌ச்சின் 21 ஓட்ட‌ங்க‌ளில் ஆட்ட‌ம் இழ‌ந்த‌ன‌ர்.17 ப‌ந்துக‌ளில் 24 ஓட்ட‌ங்க‌ள் அடிக்க‌வேண்டிய‌ போது ச‌ச்சின் ஆட்ட‌ம் இழ‌ந்தார்.டோன்மியின் ம‌ந்த‌மான‌ விளையாட்டு ர‌சிக‌ர்களை வெறுப்பேற்றிய‌து. ஜ‌டேஜா அடுத்த‌டுத்து இர‌ண்டு ப‌வுண்ட‌ரிக‌ளும் டோனி தொட‌ர்ச்சியாக‌ மூன்று ப‌வுண்ட‌ரிக‌ளும் அடித்து வெற்றியை உறுதி செய்த‌ன‌ர்.

  ஆட்ட‌நாய‌க‌னாக‌ த‌வான் தேர்வு செய்ய‌ப்ப‌ட்டார். க‌வாஸ்க‌ர் போட‌ர் கிண்ண‌த்தை தொட‌ர்ந்து மூன்றாவ‌து முறைய‌க‌ இந்தியா கைப்ப‌ற்றிய‌து. 2008/09,2010/11 ஆம் ஆண்டுக‌ளும் இந்தியா கிண்ண‌‌த்தை வென்ற‌து.

இந்தியாவின் டெஸ்ட் வெற்றியை ர‌சிக‌ர்க‌ள் ம‌கிழ்ச்சியாக‌க்கொண்டாடிய‌ வேளையில் பிளெட்ச‌னின் ஒப்பந்த‌த்தை மேலும் ஒருவ‌ருட‌ம் நீடித்து அத்கிர்ச்சிய‌ளித்துள்ள‌து இந்திய‌ கிரிக்கெற் க‌ட்டுப்பாட்டுச்ச‌பை.உல‌க‌க்கிண்ண‌த்தை வென்று இந்திய‌ அணி  உச்ச‌த்தில் இருந்த‌வேளையில் பிளெச்ச‌ர் ப‌யிற்சியாள‌ராக‌ நிய‌ம‌ன‌ம் பெற்றார்.  10 போட்டிக‌ளில் தோல்விய‌டைந்த‌து.  பிளெட்ச‌ரின் ஒப்ப‌ந்த‌ம் நீடிக்க‌ப்ப‌ட‌மாட்டாதென்றே அனைவ‌ரும் எதிர்பார்த்த‌ன‌ர். ஜூலையில் ந‌டைபெற‌ உள்ள‌ ச‌ம்பிய‌ன் கிண்ண‌ப் போட்டியை‌க்க‌ருத்தில் கொண்டே பிளெட்ச‌ருக்கு மேலும் ஒரு வ‌ருட‌ நீடிப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

  புதிய‌ ப‌யிற்சியாள‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டால் வீர‌ர்க‌ளை அவ‌ர் புரிந்துகொள்வ‌த‌ற்கு கால‌ அவ‌காச‌ம் போதாது என்ற‌ கா‌ர‌ண‌த்துக்காக‌வே  பிளெட்ச‌ர்க்கு மீண்டும் வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப்ட்டுள்ள‌து.இத‌ன் பின்ன‌ணியிலும் டோனி இருப்ப‌தாக‌க் க‌ருத‌ப்ப‌டுகிற‌து.
ஹர்பஜனுக்கு கெüரவம்!

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த ஹர்பஜன் சிங் பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கெüரவிக்கப்பட்டார்.
  3-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்ட உணவு இடைவேளையின்போது இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பஞ்சாப் கிரிக்கெட் சங்க செயலர் எம்.பி.பாண்டோவ், ஹர்பஜனுக்கு சால்வை அணிவித்ததோடு, வெள்ளித் தட்டையும் பரிசாக வழங்கினார்.

போட்டித் துளிகள்..

* இந்தப் போட்டியில் 187 ரன்கள் குவித்ததன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 6-வது இடத்தைப் பிடித்தார் ஷிகர் தவன்.

* அறிமுகப் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார் ஷிகர் தவன். 1987-ல் கொழும்பில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர் பிரென்டன் குருப்பூ ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் குவித்ததே, அறிமுகப் போட்டியில் தொடக்க வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் ஆகும்.

* அறிமுகப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி சதமடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை தவன் பெற்றுள்ளார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து இரண்டாவது முறையாக 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் முரளி விஜய். டெஸ்ட் போட்டியில் விஜய் அடித்த 3 சதங்களுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டவையாகும்.

* இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர்கள் முரளி விஜய், ஷிகர் தவன் ஆகிய இருவருமே 150 ரன்களுக்கு மேல் குவித்தனர். டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்கள் இருவரும் 150 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 114-வது முறையாகும். இந்திய வீரர்கள் 2-வது முறையாக இந்த சாதனையை செய்துள்ளனர். முன்னதாக 1955-56-ல் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர்கள் வினு மன்கட் 231, பங்கஜ் ராய் 173 ரன்கள் எடுத்துள்ளனர்.

* ஆஸ்திரேலியாவின் பீட்டர் சிடில் டெஸ்ட் போட்டியில் 7-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெளிநாட்டு மண்ணில் 2-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக "ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. நான்காவது முறையாக, ஒரு தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முன்னதாக நியூசிலாந்து (3-1, 1968), இங்கிலாந்து (3-0, 1993), இலங்கை (3-0, 1994) அணிகளுக்கு எதிராக இச்சாதனை படைத்தது.
* இந்தியாவுக்கு எதிரான "ஹாட்ரிக்' தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி, சுமார் 25 ஆண்டுகளுக்கு பின், ஒரு டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டியில் தோல்வி அடைந்தது. கடைசியாக 1988-89ல் சொந்த மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. பின் நான்காவது டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, கடைசி போட்டியை "டிரா' செய்தது.

மொகாலி டெஸ்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான், அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற 4வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக பிரவீண் ஆம்ரே, ஆர்.பி. சிங், அஷ்வின் ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், இத்தொடரில் 5வது முறையாக ரவிந்திர ஜடேஜாவின் "சுழலில்' அவுட்டானார். இதன்மூலம் கிளார்க்கை அதிக முறை அவுட்டாக்கிய இந்திய பவுலர்கள் வரிசையில் 3வது இடத்தை ஜாகிர் கானுடன் (5 முறை) பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடத்தில் இஷாந்த் சர்மா (7 முறை), அனில் கும்ளே (6 முறை) ஆகியோர் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணி, 13வது முறையாக முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் எடுத்து தோல்வி அடைந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தலா 5 முறை தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் (2 முறை), தென் ஆப்ரிக்கா (ஒரு முறை) அணிகளுக்கு எதிராகவும் இதுபோன்ற தோல்வியை சந்தித்தது.
  இந்திய அணி, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய கடைசி 6 போட்டியிலும் வெற்றி பெற்றது. கடைசியாக விளையாடிய 10 போட்டியில் ஒரு முறை கூட தோல்வி அடையவில்லை. எட்டு போட்டியில் வென்ற இந்தியா, 2 போட்டியை "டிரா' செய்தது. 

Friday, March 15, 2013

காங்கிரஸை எதிர்த்து தி.மு.க. போராட்டம்



இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசியல் களம் சூடாகியுள்ளது. தமது அரசியல் இருப்பை வெளிப்படுத்துவதற்காக தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் அவ்வப்போது இலங்கைப் பிரச்சினைபற்றி உரத்து குரல் கொடுப்பார்கள். இலங்கை தமிழ் மக்களுக்காக தமிழக மாணவர்கள் தமது உணர்வுபூர்வமான போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

இலங்கைத்தமிழ் மக்களின் உரிமைக்காகவும் இலங்கை அரசை எதிர்த்தும் சென்னை லயோலாக் கல்லூரியின் எட்டு மாணவர்கள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக அரசு சிதறடித்துள்ளது. நள்ளிரவு  உண்ணாவிரதத்திடலினுள் புகுந்து பொலிஸார் மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வைத்தியசாலையில் சேர்த்தனர். இலங்கைப் பிரச்சினையில் கருணாநிக்குப் போட்டியாக செயற்படும் ஜெயலலிதாவுக்கு இது கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவர்களின் உண்ணாவிரதம் மக்களின் ஆதரவைப் பெற்று விடுமோ என அஞ்சிய அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை சந்தித்து தமது ஆதரவினைத் தெரிவித்தனர். திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன், சு.ப.வீரபாண்டியன் ஆகியோர் சென்றபோது மாணவர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருக்கும் பலத்த எதிர்ப்புக் காட்டப்பட்டது. அரசிய லுக்கப்பால்  மாணவர்களின் உணர்வு உள்ளது. 

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்திய மத்திய அரசின் மீது கடும் அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பித்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் தமிழக மக்கள் மத்தியில்காங்கிரஸ்  தலை எடுக்க முடியாத நிலை ஏற்படும் என்பதை ராகுல்காந்தி உணரத்தொடங்கியுள்ளார். 

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக உலக நாடுகள் பலவும் தமது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இதுபற்றி இதுவரை வாயைத் திறக்காத ராகுல்காந்தியின் மனதில் பாலச்சந்திரனின் மரணம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக‌ தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக இந்திய அரசு ஆதரவு தெரிவிக்காவிடினும் இதுபோன்ற சம்பவங்களுக்கு மனம் வருந்துவதாகத் தெரிவித்தாலே போதும் என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.

இந்திய அரசுக்கு எதிராக டெசோ மூலம் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்துகிறார் கருணாநிதி. சென்னை துணைத்தூதரகம் முற்றுகைப்போராட்டம், டெல்லியில் டெசோ மாநாடு என்பவற்றைத் தொடர்ந்து தமிழகத்தின் முழு அடைப்பு போராட்டம் நடத்தி தனது கட்சியின்  பலத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் கருணாநிதி. 
வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவை தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால், திராவிட முன்னேற்றக்கழகத்தின் போராட்டம் ஏனையவற்றைவிட  பிரமாண்டமானதாக உள்ளது. 

கருணாநிதியின் கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் தொண்டர்கள் உள்ள கட்சி என்பதை திராவிட முன்னேற்றக்கழகம் நிரூபித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்கள் உட்பட பல தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை துணைத் தூதரக முற்றுகையின் போதும் பொலிஸார் எதிர்ப்பார்த்ததைவிட அதிகமானவர்கள் கைது கைது செய்யப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு கடை அடைப்பும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றியைத் தேடி கொடுத்துள்ளது. 

மத்திய அரசில் கூட்டணியாக இருக்கும் திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேற வேண்டும் என்ற நெடுமாறன் அறிவித்துள்ளார். இதையே தான் கருணாநிதியும் எதிர்ப்பார்க்கிறார்.  மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் இப்போ ராட்டங்கள் புறக்கணிக்கப்பட்டால் அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்து விட்டு மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேறிவிடும். ஆனால் அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு காங்கிரஸ் கட்சி சந்தர்ப்பம் வழங்குவதற்கு தயாராக இல்லை. 
திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்  ஆகியவற்றின் மீது சவாரி செய்து தேர்தலைச் சந்திப்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. திராவிட முன்னேற்றக்கழகத்தைக் கைவிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திடம் சரணடைய‌ முடியாத நிலையில் உள்ளது காங்கிரஸ். ஆகையினால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கோபத்தைக் குறைக்கும் முயற்சியேலேயே காங்கிரஸ் கட்சி உள்ளது. ஜெனீவா பிரச்சினை இந்த மாதத்துடன் முடிவுக்கு வந்துவிடும். இந்திய நாடாளுமன்றம் பொதுத்தேர்தல் வரை கருணாநிதி மிரட்டுவார்.

Thursday, March 14, 2013

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 50


கணவனுக்குத்தெரியாதுதாய்இன்னொருவனுடன்கூடிக்குலாவுவதைப்பார்க்கும்  சிறுமி,அது பற்றி தகப்பனிடம் சொல்லத்தெரியாது தவிக்கிறாள்.தாயின் கள்ளக்காதலனின் பார்வை தன் மீது விழுவதை வெளியேசொல்லமுடியாது தவிக்கிறாள்.வளர்ந்தபின்ஒருவனைக்காதலிக்கிறாள்.சகோதரிக்காகஅவளைக்கை விடுகிறான் அவன்.தன்னை நேசித்த ஒருவனிடம் தன்னை இழக்கிறாள். அவனோ சகோதரி என்கிறான்.ஆண்களின் வக்கிரபுத்தியால் விரக்தி அடைந்த அவளை ஒருவன் காதலிக்கிறான்.இந்தச்சிக்கலான கதையுடன் 1978 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப்பெற்ற படம்தான் "அவள் அப்படித்தான்."
  பெண்களைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கும் கமலுக்கு உதவியாக தனது அலுவலகத்தில்வேலைசெய்யும்ஸ்ரீப்ரியாவை அனுப்புகிறார் ரஜினிகாந்த்.சிறு வயதுமுதலேஆண்களால்வஞ்சிக்கப்பட்டஸ்ரீப்ரியாவுக்குஆண்களைக்கண்டாலேவெறுப்பு.பெண்களைப்பற்றி ஆவணப்படம் தாயாரிக்கும்கமலையும் எள்ளி நகையாடுகிறார். ஸ்ரீப்ரியாவின் அலட்சியப்போக்கை அமைதியாக ரசித்தபடி தனது கடமையை முன்னெடுக்கிறார் கமல்.
   சமூகத்தால்வஞ்சிக்கப்பட்ட,ஆண்களால்ஏமாற்றப்பட்டபெண்களைப்பராமரிக்கும் இல்லத்தை நடத்தும் பெண்மணியை கமல் பேட்டி கண்ட பாணி  ஸ்ரீப்ரியாவை வெகுவாகக்கவர்ந்தது. ஆண்களால் ஏமாற்றப்பட்டு உங்கள் உங்கள் இல்லத்தில் தங்கி இருக்கும் இளம் பெண் ஒருவருக்கு உங்கள் மகனைத்திருமனம் செய்து வைப்பீர்களா என்று கமல் கேட்டதால் அதிர்ச்சியடைந்த சமூகசேவகி  எரிச்சலடைந்து வெளியேறுகிறார்.அந்த ஒரே ஒரு கேள்வியின் மூலம் கமலை மதிக்கத்தொடங்குகிறார்  ஸ்ரீப்ரியா. நெஞ்சில் ஈரம் இருக்கும் ஆண்களும் உலகிலிருப்பதை முதன் முதலாகக் காண்கிறார்  ஸ்ரீப்ரியா.
  நெற்றியில் விபூதி , கையில் மதுக்கிண்ணம் ஆகியவற்றுடன் பெண்களுக்கு வலை வீசும் ரஜினியையும், பெண்களூக்கு மதிப்புக்கொடுத்து அவர்களை உயர வைக்க விரும்பும் கமலையும் கண்டு வியப்படைகிறார்  ஸ்ரீப்ரியா.  எல்லோருடனும் வெடுக்கென எடுத்தெறிந்துபேசும்  
ஸ்ரீப்ரியாவுக்கு கமல் புரியாத புதிராக இருந்தார்.ஸ்ரீப்ரியாவைப்பற்றி ரஜினியுடன் கமல் உரையாடியபோது   ஸ்ரீப்ரியாவுக்குத்தேவை ஒரு ஆம்பளை என்கிறார் ரஜினி அதை ஏற்க மறுக்கிறார் கமல்.ஸ்ரீப்ரியாவின் வாழ்க்கையில் ஏதோ ஒரு பாதிப்பு இருக்கிறது. அதனால் தான் இப்படி இருக்கிறார் என கமல் கூறுகிறார். 

  கமலைப்பற்றி ஓரளவுக்குத்தெரிந்தபின்னர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களைக்கூறுகிறார்ஸ்ரீப்ரியா.சிறுவயதில்வீட்டிலேதகப்பனில்லாதபோது  இன்னொரு ஆணுடன் தாய் படுக்கையில் இருப்பதைப்பார்க்கிறார்.இந்த விசயம் மெல்லமெல்ல கசிந்து அயலவர்களுக்கும் தெரிய வருகிறது.ஸ்ரீப்ரியாவுடன் படிப்பவர்கள் கேலி செய்கிறார்கள்.
  தாயுடன் திருட்டுத்தனமாக உறவுகொள்பவனின் பார்வை ஸ்ரீப்ரியாவின் மீது விழுகிறது. இதைப்பற்றி தகப்பனிடன் சொல்ல முடியாது தவிக்கிறார் ஸ்ரீப்ரியா.தகப்பனுக்குத்தெரிந்தபோதும் அவரால் எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது. வாழ்ககையில் வெறுப்படைந்த ஸ்ரீப்ரியாவை ஒருவன் காதலிக்கிறான்.தன் வாழ்க்கையில் புதியதொரு ஒளி வந்ததென நினைத்து அவன் மீது உயிரை வைக்கிறார் ஸ்ரீப்ரியா. சகோதரிகளின் எதிர்காலத்துக்காக பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து ஸ்ரீப்ரியாவை கைவிடுகிறார் காதலன்.
      மனமுடைந்த ஸ்ரீப்ரியா சேர்ச்சுக்குச் செல்கிறார்.பாதிரியார் ஸ்ரீப்ரியாவை கண்டு நலம் விசாரிக்கிறார்.அப்போது பாதிரியாரின் மகன் சிவச்சந்திரன் அங்கே வருகிறார்.மூவரும் பாதிரியாரின் வீட்டுக்குச்செல்கின்றனர். சிவச்சந்திரனின் பியானோ இசை ஸ்ரீப்ரியாவுக்கு புதிய தெம்பைக்கொடுக்கிறது. அன்பு நெருக்கமாகி சிவச்சந்திரனிடம் தன்னை இழக்கிறார் ஸ்ரீப்ரியா.நடந்த சம்பவத்துக்கு வருத்தப்பட்டு மன்னிப்புக்கேட்கிறார் சிவச்சந்திரன். உன்னைத்தானே திருமணம் செய்யப்போகிறேன் ஏன்  வருத்தப்படுகிறாய் என்கிறார் ஸ்ரீப்ரியா.
   ஒருநாள் இரவுவீட்டிலே நடைபெற்ற கலவரத்தினால் வீட்டைவிட்டு வெளியேறிய ஸ்ரீப்ரியா சிவச்சந்திரனைத்தேடிச்செல்கிறார்.வீட்டிலே நடைபெற்ற சம்பவத்தைக்கூறி தான் இனிமேல் வீட்டுக்குப்போகப்போவதில்லை எனவும் சிவச்சந்திரனின் வீட்டில் தங்கப்போவதாகவும் கூறுகிறார் ஸ்ரீப்ரியா.இரவு சாப்பாடு எடுத்துக்கொண்டு நண்பனைப்பார்த்துவருவதாகக்கூறிச்சென்ற சிவச்சந்திரன், ஸ்ரீப்ரியாவின் தகப்பனை அழைத்து வருகிறார்.
  வீட்டைவிட்டு வெளியேறிய தன் மகளை பாதுகாப்பாக ஒப்படைத்ததற்கு நன்றிகூறுகிறார் ஸ்ரீப்ரியாவின் தகப்பன். அப்போது ஸ்ரீப்ரியாவைச் சகோதரி என்கிறார் சிவச்சந்திரன்.தன்னை  சகோதரி என சிவச்சந்திரன் அழைத்ததால் அதிர்ச்சியடைகிறார் ஸ்ரீப்ரியா. இரண்டு ஆண்கள் தன்னை ஏமாற்றியதால் ஆண்கள்மீது  ஸ்ரீப்ரியாவுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.
 அலுவலகத்தில்வேலைசெய்பவர்கள்தன்னைப்பற்றி அவதூறாகப்பேசியதால் அவர்களுடன் பிரச்சினைப்படுகிறார் ஸ்ரீப்ரியா.பிரச்சினைகளுக்கு நீதான் காரணம் என ரஜினி கூறியதால் ஆத்திரமடைந்த ஸ்ரீப்ரியா வேலையை இராஜினாமாச்செய்கிறார். ஸ்ரீப்ரியா  இராஜினாமாச்செய்ததைஅறிந்த கமல் அவரின் வீட்டுக்குச் சென்று மீண்டும் வேலையில் சேரும்படியும் ரஜினியுடன் தான் கதைப்பதாகவும் கூறுகிறார்.ரஜினியைச்சந்தித்த கமல்,ஸ்ரீப்ரியாவை மீண்டும் வேலையில் சேர்க்கும்படி கேட்கிறார். ஸ்ரீப்ரியா வேலையில் சேர்ந்து எட்டு மணி நேரமாச்சு என ரஜினி கூரியதும் அதிர்ச்சியடைகிறார் கமல்.ஸ்ரீப்ரியாவிடம் இது பற்றி கமல் கேட்டபோது போகணும்னு தோணிச்சு போனேன்.வரணும்னு தோணிச்சு வந்தேன் என அலட்சியமாகக்கூறினார். 
 ஸ்ரீப்ரியாவைத்திருமணம் செய்ய கமல்விரும்புகிறார். இதேவேளை கமலுக்குத்திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. திருமணத்துக்காக ஊருக்கு வரும்படி கமலுக்கு கடிதம் வருகிறது. ஸ்ரீப்ரியாவை மணம்முடிக்கும்தனதுவிருப்பத்தைஸ்ரீப்ரியாவின்தோழியிடம்கூறியகமல்ஸ்ரீப்ரியாவுக்காகக்காத்திருப்பதாகவும்ஸ்ரீப்ரியாவரவில்லைஎன்றால்ஊருக்குப்போகப்போவதாகவும் கூறுகிறார்.
 கமலை வெறுப்பேற்றுவதற்காக ரஜினியுடன் விருந்துக்குப்போகிறார் ஸ்ரீப்ரியா.விருந்திலே தனிமையில் இருக்கும் ஸ்ரீப்ரியாவை நெருங்குகிறார் ரஜினி.முதலாளி என்று பார்க்காது கன்னத்தில் அடிக்கிறார் .ஸ்ரீப்ரியா. கமலின் உண்மையான அன்பை காலதாமதமாக உணர்கிறார் ஸ்ரீப்ரியா. திருமணம் முடித்துமனைவி சரிதாவுடன் சென்னைக்குச் செல்கிறார் கமல். 


   .புதுமணப்பெண் சரிதாவிடம் பெண்கள் சுதந்திரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக்கேட்கிறார்ஸ்ரீப்ரியா. பெண்களிடம் கமல் கேட்கும் அக்கேள்விக்கு எனக்கு அதைப்பற்றி எதுவும்தெரியாது என அப்பாவியாகப்பதிலளிக்கிறார் சரிதா.   
 கமல்,ரஜினி,ஸ்ரீப்ரியாஆகியமூவரும்போட்டிபோட்டுநடித்தனர்.ஸ்ரீப்ரியாவின் நடிப்பு பெண் ரசிகைகளைக்கவர்ந்தது.மாப்ளே என்று கமலை அடிக்கடி கலாய்த்து  தன் முத்திரையைப்பதித்தார் ரஜினி. 
கமல்,ரஜினி,ஸ்ரீப்ரியா,சிவச்சந்திரன்,இந்திர,பேபி சித்ரா,குட்டி பத்மினி,சரிதா ஆகியோர் நடித்தனர்.
 கண்ணதாசன் எழுதிய வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை எனும் பாடலை எஸ்.ஜானகிபாடினார்.கங்கை அமரன் எழுதிய உறவுகள் தொடர் கதை உணர்வுகள்சிறுகதை எனும் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடினார்.கங்கை அமரனின் பன்னீர் புஸ்பங்களே எனும் பாடலை கமல் பாடினார். இலையராஜாவின் இசை படத்துக்கு மெருகூட்டியது.
  கதை,திரைக்கதை உரையாடல் வண்ண நிலவன்,சோமசுந்தரேஸ்வரர், ருத்ரய்யா.இயக்கம்,தயாரிப்பு ருத்ரய்யா.

ரமணி
மித்திரன் 17/03/04


Wednesday, March 13, 2013

இந்திய அணியின் புதிய ஆரம்பம்


  இந்திய கிரிக்கெற் அணி பெற்ற பல வெற்றிகளுக்குக்காரணமாக இருந்த ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான ஷேவக் கம்பீர் ஆகியோர் இல்லாது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளது இந்திய கிரிக்கெற் அணி.
 சச்சின், ட்ராவிட், லக்ஷ்மன், கங்குலி, ஷேவக், கம்பீர் ஆகிய அனுபவவீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி சில போட்டிகளில் தோல்வியடைந்தது.மூத்த வீரர்களின் பங்களிப்புக்குறைவடந்ததே தோல்விக்குக் காரணம்  என்று டோனி வெளிப்படையாகக்கூறினார். நட்சத்திர வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்ததும்,களத்தடுப்பில் தாமதமாகச்செயல்படுவதும்தோல்விக்குக் காரணம் என டோனி கருத்துத்தெரிவித்தார்.
    கங்கிலி,லக்ஷ்மன்,ட்ராவிட் ஆகியோர் ஓய்வுபெற்றதால்சச்சினும் ஓய்வுபெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஒருநாள் போட்டியில் ஓய்வுபெற்ற சச்சின் டெஸ்ட்போட்டிகளில் விளையாடப்போவதாகத்தெரிவித்தார். ஷேவக்,கம்பீர், சச்சின் ஆகிய மூவரும் தொடர்ச்சியாக குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.மூவரையும் ஒரே நேரத்தில் அணியில் சேர்க்கமுடியாதுசிரமப்பட்டடோனிசுழச்சிமுறையில் ஒருவருக்கு ஓய்வுகொடுத்து இரண்டு  பேருக்கு விளையாடச்சந்தர்ப்பம் கொடுத்தார் டோனி.
   ஷேவக்,கம்பீர் ஆகிய இருவரும் அண்மைக்காலமாகப் பிரகாசிக்கவில்லை.அவுஸ்திரேலியாவுக்குஎதிரான முதல் இரண்டு  டெஸ்ட் போட்டிகளில் கம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.கம்பீருக்குப்பதிலாக முரளி விஜய் ஆரம்பத்துடுப்பாட்டவீரராகக் களமிறங்கினார்.தேர்வாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய விஜய் தனது இடத்தைத்தக்கவைத்துள்ளார்.ஷேவக்கின்மீது நம்பிக்கை இழந்த தேர்வாளர்கள் எஞ்சிய இரண்டுபோட்டிகளுக்கு ஷேவக்கைத்தேர்வுசெய்யவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு  எதிரான மூன்றாவது நான்காவது போட்டிகளுக்கான வீரர்களின்பட்டியலைவெளியிட்ட இந்திய தேர்வுக்குழு ஷேவக்கின் பெயரை நீக்கி 14 வீரர்களின் பெயரை வெளியிட்டது.

  ஷேவக்கின் பெயரை நீக்கிய தேர்வுக்குழு அவருக்குப்பதிலாக இன்னொருவரின் பெயரை சேர்க்கவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு  எதிரான போட்டியில் பரீட்சார்த்தமாக் ஒரு வீரரை ஆரம்பத்துடுப்பாட்ட வீரரொருவரைகளமிறக்க இந்தியா முடிவெடுத்துள்ளதுஅந்த வீரர் சிறப்பாகச்செயற்பட்டால் ஷேவக் தன்னை நிரூபிக்க வேண்டிய நிலை எற்படும்.
   இந்திய அணியின் ஆரம்பத்துடுப்ப்பாட்டவீர
ர்களான ஷேவக், கம்பீர் ஜோடி 87 இன்னிங்ஸ்களில் விளையாடி4412 ஓட்டங்களைக்குவித்துள்ளது.இவர்களது அசராசரி 52.25 ஆகும்.சிறந்த ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் இந்த ஜோடி 5ஆவது இடத்தில் உள்ளது.எதிரணி பந்து வீச்சாளர்களூக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இவர்கள்விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என எதிரணி ரசிகர்கள் வேண்டுதல் செய்வார்கள்.
  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான  இரண்டு போட்டிகளிலும் விளையாடிய ஷேவக் 27 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.2011 ஆம் ஆண்டு சதமடித்தபின்னர் ஷேவக் சிறப்பாக விளையாடவில்லை.2004 ஆம் ஆண்டு கங்குலியின் பரிந்துரையின் பிரகாரம் ஆரம்பத்துடுப்பாட்டவீரராகக்களமிறங்கினார் ஷேவக்.
மத்தியதரவரிசை வீரரான ஷேவக்கை ஆரம்பத்துடுப்பாட்டவீரராக அறிமுகப்படுத்தினார் கங்குலி. கும்ப்ளே அணித்தலைவராக இருந்தபோது அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட  ஷேவக் மீண்டும்  திரும்பிவந்து அடிலெய்ட்டில் 151 ஓட்டங்கள் அடித்து டெஸ்ட்போட்டியைச் சமப்படுத்தினார்.அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் ஷேவக்.

  விஜயுடன் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராகக்களமிறங்குவது தவானா, ரகானேயா என்ற ரசிகர்களின் சந்தேகத்துக்கு தவான் தான் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் என்று கோடி காட்டியுள்ளது இந்திய கிரிக்கெற் தெரிவுக்குழு.ரகானே மத்தியவரிசை வீரர் என்ற வசனத்துடன் தவான் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.ரகானேயின் துடுப்பாட்ட சராசரி 62.04 ஆகவும் தவானின் துடுப்பாட்ட சராசரி 52.22  ஆகவும் உள்ளன.வடக்கு மண்டல் அணியில் இரண்டு சதங்களும்,
டுலீப் ட்ராபியில் ஒரு சதமும்,அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சிப்போட்டியில்63 ஓட்டங்களும் எடுத்த தவான் மீது தேர்வுக்குழுவின் பார்வை விழுந்துள்ளது. விஜயும்தவானும் பல போட்டிகளில் இணைந்து விளையாடியதும்,இடது வலது கைதுடுப்பாட்ட வீரர்களாக இருப்பதும்சாதகமாக உள்ளது.விஜயும் ,தவானும் சாதித்தால் ஷேவக்  மத்தியவரிசை வீரராக களம் இறங்குவார். அல்லது டெஸ்ட் போட்டிக்கான கதவைத்தட்டும் ரெய்னா நுழைந்து விடுவார்.
  சென்னை, ஹைதராபாத் மைதானங்கள் சுழல் பந்து வீச்சாளர்களின் சொர்க்காபுரியாக இருந்தன.துடுப்பாட்ட வீரர்களும் சோடைபோகாது தமது திறமையை வெளிப்படுத்தினர். அஸ்வின் 18,ஜடேஜா 11,ஹர்பஜன் 5,மக்வெல்ஸ், லயன் தலா 4,தோகட்டி மூன்று விக்கெற்களை வீழ்த்தியுள்ளனர். மூன்றாவது போட்டி நடைபெறும் மொகாலி மைதானம் துடுப்பாட்டம் பந்துவீச்சு ஆகியவற்றுக்குச் சாதகமாக இருக்கும் என மொகாலி மைதான பராமரிப்பாளர் கூறியுள்ளா
  அவுஸ்திரேலிய அணியை எப்படி வீழ்த்தலாம் என இந்திய அணியின் பயிற்சியாளரும் வீரர்களும் தலையைப்பிச்சுக்கொண்டிருக்கையில் உப தலைவர் ஷேன் வட்சன், பெட்டிசன்.ஜோன்சன்,சுவாஜா ச்ச்கிய வீரர்கலை அணியிலிருந்து வெளியேற்றி அதிர்ச்சி அளித்துள்ளது அவுஸ்திரேலியா
    அவுஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச்செல்ல என்ன செய்யவேன்டும் என வீரர்களிடம் பயிற்சியாலர் ஆலோசனை கேட்டுள்ளார்.வட்சன்,பெற்றிசன் ஜோன்சன்,சுவாஜா ஆகிய நான்கு வீரர்களுமாலோசனை வழங்காது பயிற்சியாளரின் ஆலோசனையைப்புறக்ணித்தனர்.ஆகையால் நான்கு வீரர்களும் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.இது அவுஸ்திரேலியாவுப்புப்பின்னடைவையும் இந்தியாவுக்கு தெம்பையும் அளித்துள்ளது.
  அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் நால்வர் வெளியேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்தியத் தொடருக்குப்பின்னர் இப்பிரச்சைனை விஸ்வரூபம் எடுக்கும்.


Friday, March 8, 2013

ஜெயலலிதாவின் சாதனையும் கருணாநிதியின் எச்சரிக்கையும்



தமிழகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது திராவிட முன்னேற்றக்கழகம். மத்திய அரசை மிரட்டுவதற்காக டெசோவைக் கையில் எடுத்த திராவிட முன்னேற்றக்கழகம் ஜெ னீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மத்திய அரசுக்கு  கிடுக்குப்பிடி போடவேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்து விட்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். ஜெ னீவாவில் இந்தியா என்ன செய்யப் போகிறது  என்ற கேள்வியே இன்று பலரின் மனதில் உள்ள கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு இந்திய அரசு  வெளிப்படையாக பதிலளிக்கவில்லை. வெங்கையா நாயுடு, மைத்திரேயன், டி.ராஜா,  திருச்சி சிவா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கவன ஈர்ப்பு விவாதத்தில் பங்குபற்றி இலங்கையின் இறுதிப்போரில் நடைபெற்றவற்றை விளக்கிப் பேசினார். திராவிடமுன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இலங்கை யா இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தமிழரா வேண்டும் என முடிவு செய்யுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்ட குற்ற பிரேரணைக்கு ஆதாரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும் பாரதீய ஜனதாக்கட்சி போன்ற தேசியக்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் கருணாநிதி கை வலிக்க பல கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் பல கடிதங்களை எழுதி விட்டார். இலங்கைக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்துகிறாரே தவிர குற்றப்பிரேரணையை ஆதரிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவோம் என்று ஒரு வார்த்தை கூறவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கிறாரே தவிர காங்கிரஸ் கட்சியை எதிர்த்து முடிவெடுக்க முடியாது தடுமாறுகிறார் கருணாநிதி.
இலங்கைக்கு எதிரான போராட்டங்களை தமிழக அரசியற் தலைவர்கள் பல இடங்களிலும் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். வைகோ, பழ, நெடுமாறன், சீமான்  போன்றோரும் முன்னிலை வகித்து  பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையிலுள்ள  இந்தியத்துணைத் தூதரகத்துக்கு முன்னால் டெசோவின் சார்பில்  முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்திய மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில் திடீரென தனி வழி செல்ல தீர்மானித்துள்ளது திராவிட முன்னேற்றக்கழகம். இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைவடைவதற்கு வாய்ப்பு உண்டு. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்தால் கூட்டணியிலிருந்து வெளியேறுவதே திராவிட முன்னேற்றக்கழகத்தின் நோக்கம். அதற்காகவே சந்தர்ப்பம் கிடைக்கும் போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறது.
தமிழகத்தில் பல கோஷ்டிக ளாக‌ப் பிரித்து இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் ஒரு சோதனை வந்துள்ளது. இளைஞர் அணித்தலைவர் பதவியிலிருந்து யுவராஜா தூக்கி எறியப்பட்டுள்ளார். மகளிர் அணியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவின் தற்கொலைக்கு யுவராஜ் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. யுவராஜாவின் பதவி பறிக்கப்பட்டதனால்  ஜி.கே.வாசன் கடுப்பில் உள்ளார். சிதம்பரத்தின் மகன் கார்த்திக் கோஷ்டி மிகுந்த சந்தோஷத்தில் உள்ளது.

ராகுல் காந்தியின் நேரடிக்கண்காணிப்பிலேயே தமிழக இளைஞர் அணி தலைவர் போட்டி நடைபெற்றது. ஜி.கே வாசனின் நம்பிக்கைக்குரிய யுவராஜா வெற்றி பெற்றார். இதனால் ஜி.கே.வாசனுக்கும் கார்த்திக்குமிடையிலான  பூசல் அதிகமாகியது. யுவராஜின் பதவி பறிக்கப்பட்டதன் மூலம் ஜி.கே வாசன் அடுத்து என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனது செல்வாக்கை வெளிப்படுத்த கட்சியிலிருந்து வெளியேறுவாரா அல்லது அமைதி காப்பாரா வாசனின்  முடிவைப் பொறுத்தே திராவிட முன்னேற்றக்கழகம் தனது வியூகத்தை அமைக்கும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒன்பதாவது முறையாக மந்திரி சபையை மாற்றி அமைத்து புதிய சாதனை படைத்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அமைச்சர்களின்பதவிக்காலம் மிகவும் குறுகியது.  எப்போது பதவி பறிபோகும் என்பது அவர்களுக்கு தெரியாத புதிராக உள்ளது.   சிவபதி, இந்திரா, விஜய் ஆகிய மூன்று அமைச்சர்களைத் தூக்கி எறிந்து விட்டு பூனாட்சி, வைகைச்செல்வன் ,கே.சி.வீரமணி ஆகிய மூவரை புதிதாக  அமைச்சர்களாக்கியுள்ளார் ஜெயலலிதா.

ஊழல், இலஞ்சம் திராவிட முன்னேற்றக்கழகத்துடன் உறவு போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதால் மூன்று அமைச்சர்கள் பதவியை இழந்துள்ளனர். தமிழக அமைச்சர்கள் தூக்கி எறியப்பட்ட சம்பவம்முன்னரும் நடைபெற்றுள்ளது.அப்போது கழகத்தில் அமைதி காணப்பட்டது. இப்போது சல‌சல‌ப்பு எழுந்துள்ளது. பதவியில் உள்ள அமைச்சர்களின் தில்லு முல்லு பற்றிய விபரங்கள் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் கனவில் மிதக்கும் ஜெயலலிதா கட்சிக்குள் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்திலும் புதுøவயிலும் உள்ள 40  தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் விருப்பம். காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை அரசு  இதழில் கடந்த வாரம் வெளியானது. அதனைப்பெரிய சாதனையாக அறிவித்தார் ஜெயலிதா 19 மாதங்களில் ஒன்பதாவது அமைச்சரவையை மாற்றி அமைத்ததை பெரும் சாதனையாக எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன.

புதிய  தலைமைச் செயலகம்  அண்ணா நூலகம்  ஆகியவற்றிலிருந்து திராவிட முன்னேற்றக்கழகத்தின் பெயரை இல்லாமல் செய்வதும் சாதனை தான் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.ஒரு ரூபாவுக்கு இட்லி,  ஐந்து ரூபாவுக்கு சாதம் வழங்கும் ஜெயலலிதாவின் திட்டத்தை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் சாதனையாக கருதுகின்றனர். ஜெயலலிதாவின் அடுத்த கட்ட நடவடிக்கை எல்லாம் இந்திய நாடாளுமன்றம் பொதுத்தேர்தலை முன்னிறுத்தியே அறிமுகப்படுத்தப்படுகின்றன.

கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவரும் இலங்கைப் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டுகின்றனர். 2009 ஆம் ஆண்டு வன்னியில் யுத்தம் நடைபெற்ற போது இலங்கைப் பிரச்சினையைக் கையில் எடுத்து இந்திய நாடாளுமன்றத்தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. அவரது தேர்தல் வியூகம் கைகொடுக்கவில்லை. புதிய வியூகங்களையும் புதிய சாதனைகளையும் நம்பி இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிறார் ஜெயலலிதா. 

Wednesday, March 6, 2013

இந்தியாவா இது?



 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்றதன் மூலம் இழந்தெ ப்ந்ருமையை மீண்டும் பெற்றுள்ளது இந்திய கிரிக்கெற் அணி.  அவுஸ்திரேலியாவிலும்,இங்கிலாந்திலும், இந்தியாவிலும் தொடர் தோல்விகளால் துவண்டிருந்த இந்தியாவை புரட்டிப்போடலாம் என்ற நம்பிக்கையுடன் களம் புகுந்த அவுஸ்திரேலியாவைப்புரட்டிப்போட்டது இந்தியா.

  சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இனிங்ஸ் வெற்றி பெற வேண்டிய இந்தியாவை தனது துடுப்பாட்டத்தின் முலம் தாமதப்படுத்தினார் ஹின்றிகுயிஸ்.  சென்னையில் போராடிய அவுஸ்திரேலியா ஹைதராபாத்தில் போராடும் என எதிர் பார்க்கப்பட்டது.இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. அஸ்வின்‌ வீர‌ர்க‌ளை நிலைகுலைய‌ வைத்தார். ஒன்ப‌து விக்கெற்க‌ளை இழ‌ந்து 237 ஓட்ட‌ங்க‌ள் எடுத்த‌ நிலையில் ஆட்ட‌த்தை நிறுத்திக்கொண்டு இந்தியாவை விளையாடும்ப‌டி ப‌ணித்தார் அவுஸ்திரேலிய‌ அணீத்த‌லைவ‌ர் கிளாக்.

   முத‌ல் நாளில் ஐந்து ஓவ‌ர்க‌ள் பாக்கியுள்ள‌ நிலையில் அவுஸ்திரேலியா ஆட்ட‌த்தை நிறுத்திய‌து ர‌சிக‌ர்க‌ளுக்கு ஆச்ச‌ரிய‌த்தை ஏற்ப‌டுத்திய‌து.முத‌ல் நாள் ஆட்ட‌த்தை முடிப்ப‌த‌ற்கிடையில் ஒரு விக்கெற்றை‌ வீழ்த்த‌வேண்டும், இந்திய‌ அணியை 230 ஓட்ட‌ங்க‌ளுக்குள் சுருட்ட‌வேன்டும் என்ற‌ கிளாக்கின் திட்ட‌ம் த‌விடுபொடியான‌து. முர‌ளிவிஜ‌யும் புஜாராவும் எழுச்சி பெற்று அவுஸ்திரேலிய‌ ப‌ந்துவீச்சாள‌ர்க‌ளை துவ‌ம்ச‌ம் செய்த‌ன‌ர். புஜாரா 204 ,விஜை 167 ஓட்ட‌ங்க‌ள் எடுத்து ந‌ம்பிக்கையூட்டின‌ர்.த‌லைவ‌ர் ப‌த‌வியிலிருந்து டோனியை நீக்க‌வேண்டும். ச‌ச்சினின் ப‌வ‌ர் அவ்வ‌ள‌வுதான் என்ற‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் வாய‌டைத்துவிட்ட‌ன‌ர்.  
க‌ம்பீர் நீக்க‌ப்ப‌ட்டு முர‌ளி விஜய் ஆர‌ம்ப‌த்துடுப்பாட்ட‌வீர‌ராக‌க் க‌ள‌மிற‌ங்கினார்.கொடுத்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை விஜய்  ச‌ரியாக‌ப்ப‌ய‌ன்ப‌டுத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான புஜாராவும் தமிழகத்தின் முரளி விஜய்யும் சரித்திரம் பேசக் கூடிய சாதனைகளை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நிகழ்த்தியிருக்கின்றனர்.
தமிழக வீரரான முரளி விஜய் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும் விளையாடாமலேயே இருந்து வந்தார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் க‌ம்பீர் நீக்கப்பட்டு தொடக்க வீரராக சேவாக்குடன் களம் இறக்கப்பட்டார் முரளி விஜய். சென்னை டெஸ்ட் போட்டியில் சோபிக்கவில்லை முரளி. சொற்ப ரஓட்டங்களில்ஆட்டமிழந்தார் புஜாராவைப் பொறுத்தவரையில் நம்பிக்கைக்குரிய இளம் வீரர். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் முரளி விஜய்யுடன் சேர்ந்தும் தனித்தும் ஹைதராபாத்தில்    சாதனை செய்துள்ளார்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த 2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட்டும் விவிஎஸ் லஷ்மணும் இணைந்து 376 ஓட்டங்களைக் குவித்திருந்தனர்.அதன் பின்னர் தற்போது ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் புஜாரா, முரளி விஜய் ஜோடி 370 ரஓட்டங்களைக்  குவித்திருக்கிறது
இதற்கு முன்னதாக 1956-ம் ஆண்டு சென்னையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வினோ மன்கட்டும் பங்கஜ் ராயும் இணைந்து 413 ஓட்டங்களைக்  குவித்ததுதான் இதுவரையிலான இந்திய அணியின் சாதனையாக இருக்கிறது. இதன் பின்னர் 2006-ம் ஆண்டு லக்னோவில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ராகுல் டிராவிட்டும் சேவாக்கும் இணைந்து 410 ஓட்டங்களைக்  குவித்திருந்தனர்.
இந்திய அணியில் மிகக் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிரடியாக ஆயிரம் ஓட்டங்களைத்தொட்ட   வீரர்களில் மூன்றாம் இடத்தை  பெற்றிருக்கிறார் புஜாரா.

சுனில் கவாஸ்கர் 21 இன்னிங்ஸ் விளையாடி 1,000 ஓட்டங்களையும் வினோத் கம்ப்ளி 14 இன்னிங்ஸ் விளையாடி 1,000 ஓட்டங்களையும் எட்டினர். இவர்களுக்கு அடுத்தபடியாக புஜாரா 18 இன்னிங்ஸ்கள் விளையாடி 1,000 ஓட்டங்களை எட்டி சாதித்திருக்கிறார்.

கங்குலியை முந்தியடோனி
ஹைதராபாத்தில் வென்றதன் மூலம், டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி தேடித்தந்த இந்திய கப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் டோனி (45 டெஸ்ட், 22 வெற்றி). இவர் முன்னாள் கப்டன் கங்குலியை (49 டெஸ்ட், 21 வெற்றி) முந்தினார்.

முதல் வீரர் 
அவு ஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கை (91, 16), இரண்டு இன்னிங்சிலும் "போல்டாக்கிய' முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் ஜடேஜா. இதற்கு முன் கடந்த, 2009ல் கேப்டவுனில் நடந்த டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டைன், கிளார்க்கை, இரண்டு இன்னிங்சிலும் "போல்டாக்கினார்'. 
* இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர் ஜடேஜா (3, 3 விக்கெட்) டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார்.
முதல் இந்தியர் 
இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் அஸ்வின், டெஸ்ட் அரங்கில் எட்டாவது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றாவது முறையாக இம்மைல்கல்லை எட்டினார்.
* தவிர, 14 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் (81 விக்கெட்) கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் அஸ்வின். சர்வதேச அரங்கில் மூன்றாவது வீரர் என்ற சாதனை படைத்தார். இங்கிலாந்தின் ரிச்சர்ட்சன் (14 டெஸ்ட், 88 விக்கெட்), அவு ஸ்திரேலியாவின் டர்னர் (14 டெஸ்ட், 83 விக்கெட்) ஆகியோர் முதல் இரண்டு இரண்டு இடங்களில் உள்ளனர். 
* இத்தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் அஸ்வின் (18 விக்கெட்) முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா (11 விக்கெட்) இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இரண்டாவது சிறந்த வெற்றி
இரண்டாவது டெஸ்டில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 135 ஓட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தனது இரண்டாவது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1998ல் கோல்கட்டாவில் நடந்த டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 219ஓட்டங்ககள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
* சர்வதேச அரங்கில் இந்தியாவின் 6வது சிறந்த வெற்றி இது. கடந்த 2007ல் பங்களாதேஷுக்கு எதிராக தாகாவில் நடந்த டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ், 239 ஓட்டங்ககளில் இந்தியா வென்றது. 
4வது முறை 
அவு ஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி, ஐதராபாத் (இன்னிங்ஸ்,135 ஓட்டங்கள் 2013), கோல்கட்டா (இன்னிங்ஸ், 219 ஓட்டங்கள் 1998), மும்பை (இன்னிங்ஸ், 100 ஓட்டங்கள் 1979), சிட்னி (இன்னிங்ஸ், 2 ஓட்டங்கள் 1978) என நான்காவது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்சில் 131 ஓட்டங்களுக்கு "விக்கெற்களையும் இழந்த‌ அவு ஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில், தனது 5வது மோசமான டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 2004ல் மும்பையில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 93 ஓட்டங்களுக்கு "ஆல் அவுட்டானது'. 
* தவிர, இந்திய அணிக்கு எதிராக 7வது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1981ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் அவு ஸ்திரேலிய அணி 83 ஓட்டங்களுக்குவிக்கெற்களையும்' இழந்த‌து;

.  ரன் "மிஷின்' புஜாரா
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில், 204 ஓட்டங்களைக்  குவித்து அணியின்  ஓட்ட எண்ணிக்கை  உயர முக்கியக் காரணமானார் சேதேஷ்வர் புஜாரா. டெஸ்ட் போட்டியில் அவர் தனது 2-வது இரட்டைச் சதத்தைப் பதிவு செய்ததுடன், விரைவாக ஆயிரம் ஓட்டங்களைக்  கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் 18 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரஓட்டங்களைக்  கடந்தார். வினோத் காம்ப்ளி, 14 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ஓட்டங்களைக்  கடந்ததே இந்திய வீரர்கள் மத்தியில் இன்றளவும் சாதனையாக உள்ளது. அவு ஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதமடித்த ஏழாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் புஜாரா பெற்றார்.

34  ஆண்டு சாதனை முறியடிப்பு
ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் விஜய்-புஜாரா ஜோடி 2-ம் விக்கெட்டுக்கு 370ஓட்டங்கள் எடுத்தது. இதனால், 34 ஆண்டுகளுக்கு முன்பு (1978) மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சுநீல் கவாஸ்கர் (182), திலீப் வெங்சர்க்கர் (157) ஜோடி 2-ம் விக்கெட்டுக்கு 344 ஓட்டங்கள் எடுத்த சாதனையை இந்த ஜோடி முறியடித்தது. எனினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லட்சுமன், திராவிட் ஜோடி எடுத்த 376 ரஓட்டங்கள்  முறியடிக்க முடியவில்லை.

போட்டித் துளிகள்
* டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் தனது அதிக பட்சஓட்டங்களை (162) இப்போட்டியில் பதிவு செய்தார். இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக 139 ஓட்டங்களைக்கள் எடுத்திருந்தார்.

* இந்த ஆட்டத்தில் சச்சின் வெறும் 7 ஓட்டங்களே எடுத்திருந்தாலும் அவரும் ஒரு சாதனை புரிந்திருந்தார். 3-ம் விக்கெட்டாக களமிறங்க பெவிலியனில் சச்சின் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததுவே அந்த சாதனையாகும்.

* இப்போட்டியில் கோலி 34ஓட்டங்களைகள் எடுத்திருந்தபோது, ஆயிரம்ஓட்டங்களைக்  கடந்தார். அவர் 16 டெஸ்டில் விளையாடி இந்த ஓட்டங்களைகளை எடுத்தார்

Friday, March 1, 2013

வலையில் விழுந்த வேட்டைக்காரன்


சத்தியமங்கலம், மாதேஸ்வர காட்டுப்பகுதியில் தமிழக,கர்நாடக அதிரடிப்படைகளை அச்சுறுத்தி வந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் தமிழக அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதால் இரண்டு மாநிலங்களும் நிம்மதிப்பெரு மூச்சு விட்டுள்ளன.

  சந்தனக்கடத்தல் வீரப்பன்,சேத்துக்குளி கோவிந்தன்,சேதுமணி,சந்திர கெளடா ஆகிய நான்கு பேரையும் தமிழக அதிரடிப்படைத்தலைவர் விஜயகுமார் தலைமையிலான குழு திட்டமிட்டு காட்டுக்கு வெளியே வரவழைத்து சுட்டுக்கொன்றுள்ளது.

  யானையை வேட்டையாடும் வீரப்பனின் வேட்டையில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழக கர்நாடக அதிரடிப்படைகள் ஈடுபட்டன. இரண்டு மாநில அதிரடிப்படைகளுக்கும் தண்ணிகாட்டிய வீரப்பனின் அட்டகாசத்தை அடக்கி ஒடுக்கஎடுக்கப்பட்டமுயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்த‌.

  வீரப்னின் முதல்வேட்டை சிறு திலேயே ஆரம்பித்து விட்டதாகவும் சிறுவதிலேயே ந்தத்துக்காகயானையைக்கொன்றதே முதல்,வேட்டைஎனவும், சுமார் 300 யானைகளை வீரப்பன் சுட்டுக்கொன்றிருப்பதாகவும் சிலல்கள் தெரிவிக்கின்ற‌.
 
1984 ஆம் ஆண்டு நான்குகர்நாடத்துறை அதிகாரிகளை வீரப்ன் சுட்டுக்கொலை செய்ததே முதல் கொலை. என்றாலும், 1987 ஆம் ஆண்டு த்தியங்கத்துறை அதிகாரியானசிதம்பத்தை வீரப்பன் சுட்டுக்கொலை செய்தபின்னரே வீரப்ன் ற்றியஅச்ச‌ம் அதிகாரிகள் த்தியில் எழுந்தது.

  ம்பிக்கையானஒருசிலரின் துணையுடன் வீரப்பன் லைமறைவாகஇருந்தபோது வீரப்பனைப்பிடிக்கும் ணி தீவிரமானது. வீரப்பனுக்கு உதவி செய்தர்கள் சித்திரதை செய்யப்பட்டார்கள். அதிரடிப்படைவீரர்களால் பெண்களில் ர் பாலியல்வல்லுற‌‌வுக்குட்படுத்தப்பட்டதாகனிதஉரிமைகள் ஆணைக்குழு குற்ற‌‌ம் சாட்டியதுவீரப்னுக்கு அவ்வப்போது உதவிவந்தநூற்றுக்கக்கானர்கள் ர்நாடத்திலும் மிழத்திலும் சிறை வைக்கப்பட்டர். க்கு வேண்டியர்களை ர்நாட‌,மிழஅதிரடிப்படையினரால் கொல்லப்பட்டதாலும் சித்திரதை செய்யப்பட்டதாலும் சீற்றடைந்தவீரப்ன் உளவாளிகளைக்கொலை செய்தான்.


  பொலிஸாருக்கும் வீரப்பனுக்கும் இடையில் ந்தநேரடி மோதலில் இரு குதியிலிம் ர் உயிரிழந்தர். பொலிஸாரினால் வீரப்னைப்பிடிக்கமுடியாதெனஉணர்ந்ததமிழக முதல்வர்ஜெயலிதா அதிரடிப்படையைகத்தில் இறக்கினார்.தேர்ந்தெடுக்கப்பட்டபொலிஸார் சிறப்புப்பயிற்சிகளின் பின்னர் அதிரடிப்படையில் இணைக்கப்பட்டர். அதேபோன்றே ர்நாடஅரசும் ன் ங்குக்கு அதிரடிப்படையை உருவாக்கியது.

 அதிரடிப்படையினரின் கிடுக்கிப்பிடியினால் வீரப்பனுக்கு உதவி செய்தர்கள் பெரும் துன்பத்தை அனுபவித்தர்.க்கு உதவிசெய்தர்களைத்துன்புறுத்தியபொலிஸாரையும் த்துறை அதிகாரிகளையும் வீரப்ன் தேடிச்சென்று ழிவாங்கினான்.வீரனுக்கு உதவி செய்தர்கள்மீது டி.எஸ்.பி சிதம்பநான் டுமையானசித்திரதை செய்தார்.சிதம்பநாதனைப்பிடித்தவீரப்ன் அவது லையை வெட்டி எடுத்துச்சென்று காட்டிலே புதைத்தான்.
இந்தச்செயல் பொலிஸார்மீது வீரப்பனுக்கு இருந்தகோபத்தை வெளிக்காட்டியஅதேவேளை வீரப்னைக்கொல்லவேண்டும் என்றவெறியை பொலிஸாருக்கு ஊட்டியது.


  வீரப்‌‌னின் ம்பி அர்ஜுனைப் பொலிஸார் விசாரனை செய்தபோது னைற் அருந்த் தி மானதாகப்பொலிஸார் தெரிவித்தர்.அர்ஜுனுடன் விசாரிக்கப்பட்டமேலும் இருவர் னைற் அருந்தி உயிரிழந்ததாகப்பொலிஸார் கூறினார்கள்.பொலிஸாரின் பிடியிலிருந்தர்களிடம் னைற் எப்படி வந்தது என்றகேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
 


வீரப்பன் யார்? அப்படி ஒருவன் இருக்கிறானா? என்றகேள்வி எழுந்தபோது க்கீரன் ஆசிரியர் கோபால் காட்டுக்குச்சென்று வீரப்னைப்பேட்டிகண்டு  வீரப்னின் உருவத்தை அம்பப்படுத்தினார்.ஜெயலிதாவின் ஆட்சிக்காலத்தில் வீரப்னின் சிறப்புப்பேட்டி ன் தொலைக்காட்சியில் ஒளிபப்பானது.வீரப்பனின் சிறப்பு ஒளிபப்பு அனைவரையும் வியப்படைய‌‌ வைத்தது. கோபாலின் துணிச்சலினால் நக்கீரனின் புலனாய்வுத்தல்கள் துல்லியமானது என்றஎண்ணம் ஏற்பட்டது.

 காட்டிலே இருக்கும் வீரப்பனை நெருங்கமுடியாதுஎன்பதை உணர்ந்தஅதிரடிப்படைத்தலைவர் விஜகுமார் காட்டிலிருக்கும் வீரப்பனை வெளியே ழைக்கும் உத்தியைத்திட்டமிட்டார்.வீரப்னின் ண் பார்வை குறைவடைந்தனால் முடிவெடுக்கும் நிலைக்குத்தன்னை உயர்த்திக்கொண்டசேத்துக்குளி கோவிந்தனின் டிக்கையே வீரப்னின் உயிருக்கு உலை வைத்தது.

   முகத்தைப்பார்த்தாலே ண்பன் யார் எதிரியார் என்பதைக்கூறிவிடும் திறமை வீரப்பனிடம் உள்ளது.வைகளின் விலங்குகளின் அசைவு ஒலி என்பற்றைக்கொண்டே காட்டுக்குள் ப்பதைக்கூறும் திறமை வீரப்பனிடம் உள்ளது.வீரப்பனுடன் இருந்தர் கொலப்பட்டுவிட்டர்,சிலர் சிறைப்பிடிக்கப்பட்டர்வீரப்பனைப்பிடிக்கும் ணியிலீடுபட்டஅதிரடிப்படையினர்தினமும் 20 கிலோ மீற்றர் ம் சென்று தேடுதல் செய்தர். யானை,பாம்பு எனற்றிடமிருந்து பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டர்.

  லைவாழ்மக்களின் ம்பிகையைப்பெற்றவீரப்னிப்பிடிக்கவீரப்பனின் ழியிலேயேசெல்லவேண்டும் எனநினைத்தவிஜகுமார் லைவாழ் க்களுக்கு இலவச  முகாம்களை த்தினார். அங்குள்ளஇளைஞர் யுவதிகளுக்கு பொலிஸில் வேலைவெற்றுக்கொடுத்தார்.விஜகுமாரின் டிக்கையில் ங்கியசிலர் வீரப்பனைப்பற்றி துப்புக்கொடுத்தர்.

  வீரப்பன் ண் தெரியாமல் டுமாறுகிறான்,சேத்துக்குளி கோவிந்தன் லைமைப்பவியைப்பிடுக்கமுயற்சிசெய்கிறான்.க்கையாடல் செய்தசேதுமணி வீரப்னிடம் கெட்டபெயர் வாங்கியுள்ளான் குடும்பத்தைப்பார்ப்பற்கு ந்திரகெளடா ஆர்வமாகஉள்ளான்போன்றல்களை வீரப்பனின் ஆதவாளர்கள் த்தியில் ஊடுருவியவர்களின் மூலம் விஜகுமார் அறிந்து கொண்டார்.

  ண்பார்வையைச்சரி செய்யத்திரசிகிச்சை செய்வவேண்டும் என்பனால் த்திரசிகிச்சை என்றலையில் வீரப்பனைச்சிக்கவைக்கஅதிரடிப்படையினர் திட்டமிட்டர். விஜகுமாரின் கார்ச்சாரதியானன் வீரப்பனை வைத்தியசாலைக்குக்கொண்டுசெல்லும் அம்புலன்ஸ் சாரதியாகமாறினார்.எஸ்.கே.எஸ் ஹிஸ்பிரல் சேலம் என்றஎழுத்துடன் பொலிஸ்வாகம் அம்புலன்ஸாகமாறியது. திட்டங்கள் அனைத்தும் மிகவும் இரசியமாகடைபெற்றன‌.

   திட்டமிட்டஅந்தநாள் ந்தது.பொலிஸ் உளவாளியானசாரதி வீரப்பன் குழுவினரை அம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலையை நோக்கிச்சென்றார்.வீரப்பன் குழுவை எதிர்பார்த்துக்காத்திருந்தஅதிரடிப்படையினர் வீரப்பன் ரும் அம்புலன்ஸ் து பொறிக்குள் ரும்வரை காத்திருந்தர்.

   எதிர்பார்த்த‌ இடம் ந்ததும் ந்தேகமின்றி அம்புலன்ஸைப்பின் தொடர்ந்தலொறி ஒன்று அதனை முந்திச்சென்றது.அதிரடிப்படையின் திட்டப்படி இரண்டு லொறிகள் வீரப்பன் சென்றஅம்புலன்ஸின் இரண்டு க்கமும் நெருங்கிச்சென்ற‌.ஏற்கெனவே திட்டமிட்டடி அம்புலன்ஸின் சாரதி வாகத்தை நிறுத்திவிட்டு திறப்பையும் எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்.இரவு 10.30 ணி எங்கும் இருள். பொலிஸாரின் ஒலி பெருக்கி டையுமாறு உத்தவிட்டது.டையறுத்தவீரப்பன் கோஷ்டி சுட்டனால் அதிரடிப்படையும் சுட்டது.துப்பாக்கிச்சூட்டில் சந்தனக்கடத்தல் வீரப்பன்,சேத்துக்குளி கோவிந்தன்,சேதுமணி,சந்திர கெளடா ஆகிய நான்குபேரும் கொல்லப்பட்டர்.

   20 ருடங்களுக்கு மேலான் போராட்டத்துக்கு முடிவுகட்டப்பட்டுவிட்டது.ஆனால்,வீரப்பனின் த்தில் ந்தேகம் இருப்பதாகவும் டையவிரும்பியவீரப்பன் ண்டையை ஆரம்பித்திருக்கமாட்டான் என்றும் வீரப்பனுக்குச்சார்பானர்கள் கூறுகின்றர்.வீரப்பனுடன் ர்மங்களும் மூடிமறைக்கப்பட்டுவிட்ட‌.

  வீரப்பனின் ம் மிழ‌, ர்நாடஅரசுகளுக்கு ந்தோசத்தைக்கொடுத்துள்ளது.ஆனால் லைவாழ் க்களுக்கும் ர்நாடத்தில் உள்ளமிழர்களுக்கும்வீரப்பனின் றைவு பேரிழப்பு.மிழத்தின்  கெளத்தை வீரப்பனின் ம் தூக்கிநிறுத்தியுள்ளது.
ர்மா
மெட்ரோநியூஸ் 22/09/2004